சட்டவிரோத செயற்பாடுகள் காரணமாக 545 வழக்குகள் தாக்கல்

Published By: Vishnu

01 Feb, 2019 | 01:17 PM
image

வவுனியா மாவட்டத்தில் சட்டவிரோதமான கள்ளு மற்றும் சாராய விற்பனை, கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனைகளில் ஈடுபட்டவர்கள், கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனைகளில் ஈடுபட்டவர்கள் மீது கடந்த வருடத்தில் மாத்திரம் 545 வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட மதுவரி திணைக்களத்தின் பொறுப்பதிகாரி அசோக திலகரட்ண தெரிவித்துள்ளார்.

அந்த வகையில்  வரிசெலுத்தாமல் பீடிகள் விற்பனை செய்யபட்டமைக்காக  3 வழக்குகளும், சட்ட விரோதமாக கள்ளுவிற்பனை செய்தமைக்காக 270 வழக்குகளும், அனுமதிபத்திரம் இன்றி கள்ளை வைத்திருந்தமைக்காக 15 வழக்குகளும், அனுமதியின்றி மதுபானம் விற்பனை செய்தமைக்காக 35 வழக்குகளும். கஞ்சா வைத்திருந்தமைக்காக 5 வழக்குகளும், சட்டவிரோத வடிசாரயத்தை உடைமையில் வைத்திருந்தமைக்காக 3 வழக்குகளும், அனுமதியின்றி வெளிநாட்டு மதுபானங்கள் வைத்திருந்தமைக்காக மூன்று வழக்குகளும், அனுமதியின்றி பீடியினை உற்பத்திசெய்தமைக்காக 6 வழக்குகளும், 21 வயதிற்கு கீழ்பட்டவர்களிற்கு புகைத்தல் பொருட்களை விற்பனை செய்தமைக்காக 154 வழக்குகளும், பொது இடத்தில் புகைத்தமைக்காக 54 வழக்குகளும், தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த குற்றசாட்டுகளுடன் தொடர்புடையவர்களிற்கு  எதிராக வவுனியா நீதிமன்றில் வழக்குகள் தாக்கல் செய்யபட்டதுடன் அவர்களிற்கான தண்டபணமாக 56 இலட்சம் ரூபாய் அறவிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27