ஆசிரியையிடமிருந்து மோட்டார் வண்டி அபகரிப்பு : வவுனியாவில் சம்பவம்

Published By: Vishnu

01 Feb, 2019 | 11:36 AM
image

வவுனியாவில் தவணை முறையில் மோட்டார் வண்டி ஒன்றை வாங்கியிருந்த ஆசிரியை ஒருவரிடமிருந்து அடாத்தான முறையில் அவ் வண்டியை லீசிங் நிறுவனத்தினர் பறித்த சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.

வவுனியா பண்டாரிக்குளத்தில் வசித்துவரும் ஆசிரியை ஒருவர்  அங்குள்ள லீசிங் நிறுவனமொன்றில் தவணை முறையில் பணம் செலுத்தி மோட்டார் வண்டியொன்றை கொள்வனவு செய்திருந்தார். 

குறித்த ஆசிரியை ஒழுங்கான முறையில் பணம் செலுத்திவந்த நிலையில் இறுதியாக செலுத்த வேண்டிய ஏழு ஆயிரம் ரூபா தவணை பணத்தை செலுத்தத் தவறிய நிலையில், நேற்று மாலை 6 மணியளவில் ஆசிரியையின் வீட்டிற்கு சென்ற நபரொருவர் தனது மகளுக்கு பிரத்தியோக வகுப்பு எடுக்க வேண்டும் என தெரிவித்து வவுனியா நகருக்கு ஆசிரியையை அழைத்துச்சென்று மோட்டார் வண்டியை பறிமுதல் செய்ததுடன் குறித்த ஆசிரியையை தகாத வார்த்தைப் பிரயோகத்தின் மூலம் திட்டியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்த பாதிக்கப்பட்ட ஆசிரியை, குறித்த நிறுவனத்தில் தவணை முறைப்பணத்தை ஒழுங்காக செலுத்திவந்த நிலையில் பணம் முழுவதும் செலுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில் மோட்டார் வண்டியின் உரிமைப்புத்தகம் நிறுவனத்தால் வழங்கப்படும் என தெரிவித்திருந்தனர். 

ஆறு மாதங்கள் கடந்த நிலையில் திடீரென நீங்கள் 40 ஆயிரம் ரூபா பணம் செலுத்த வேண்டும் என தெரிவித்து இன்று என்னை ஏமாற்றி அடாத்தான முறையில் எனது வண்டியை அபகரித்துள்ளனர். இவ் விடயம் சம்பந்தமாக நான் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளேன் என தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37