கோத்­தாவை விசா­ரணை செய்ய விசேட மேல் நீதி­மன்­றுக்கு அதி­காரம் உள்­ளதா?

Published By: Vishnu

01 Feb, 2019 | 09:40 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

இலங்கை காணி மீட்பு மற்றும் அபி­வி­ருத்தி கூட்­டுத்­தா­ப­னத்­துக்கு சொந்­த­மான 33.9 மில்­லியன் ரூபா பணத்தை நம்­பிக்கை மோசடி செய்­தமை தொடர்பில் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்தபாய ராஜ­பக்ஷ உள்­ளிட்ட 7 பிர­தி­வா­தி­க­ளுக்கு எதி­ராக தொட­ரப்­பட்­டுள்ள வழக்கை  நிரந்­தர விசேட மேல் நீதி­மன்றில் விசா­ரிக்க முடி­யுமா? முடி­யாதா? என்­பது குறித்து தீர்­மானம் எதிர்­வரும் 11 ஆம் திகதி அறி­விக்­கப்­ப­ட­வுள்­ளது.  

இந்த வழக்கு விசா­ர­ணை­களில் பிர­தி­வ­ட­ஹிகள் சார்பில் முன்­வைக்­கப்பட்­டுள்ள அடிப்­படை ஆட்­சே­பனம் மற்றும் அரச தரப்பின் பதில் ஆகி­ய­வற்றை ஆராய்ந்து எதிர்­வரும் 11 ஆம் திகதி இந்த தீர்ப்பை அரி­விப்­ப­தாக விஷேட மேல் நீதி­மன்றம் நேற்று அறி­வித்­தது.

கடந்த ஜன­வரி 22 ஆம் திகதி கோத்­தா­பய மற்றும் ஏனைய பிர­தி­வ­ட­ஹிகள் சார்பில் இம்­ம­னுவை விஷேட மேல் நீதி­மன்று விசா­ரிக்க முடி­யாது என்ர தர்க்கம் முன்­வைக்­கப்ப்ட்­டது. இதற்கு பதி­ல­ளிக்க சட்ட மா அதிபர் சார்பில் ஒரு வார கால அவ­காசம் கோரப்ப்ட்­டி­ருந்­தது. அதன்படி நேற்று மீள சட்ட மா அதி­பரின் பதில் வாதத்­துக்­காக இவ்­வ­ழக்கு விசா­ர­ணைக்கு வந்­தது. இதன்­போது, பிர­தி­வா­திகள் மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்த நிலையில்,

 பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் வசந்த பெரேரா, சிரேஷ்ட அரச சட்­ட­வாதி உதார கரு­ணா­ரத்ன ஆகி­யோ­ருடன் ஆஜ­ரா­கிய சிரேஷ்ட பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் எதிர் வாதத்தை முன்­வைத்தார்.

' இந்த மன்­றுக்கு அனுப்­ப­படும் வழக்­கு­களை விசா­ரிக்கும் பொறுப்பு பிர­தம நீதி­யரசரால் இம்­மன்றின் மீது சாட்­டப்பட்­டுள்­ளது. அதனால் இங்கு அனுப்­பப்­படும் வழக்­கு­களை  விசா­ரிக்க இந்த நீதி­மன்றம் கடமைப் பட்­டுள்­ளது.  அதனால் பிர­தி­வா­தி­களின் அடிப்­படை ஆட்­சே­ப­னத்தை நிரா­க­ரித்து வழக்கை விசா­ரிக்க வேண்டும்' என சிரேஷ்ட பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் இதன் போது பதில் வாதத்தை முன்­வைத்தார்.

33.9 மில்­லியன் ரூபா பணத்தை நம்­பிக்கை மோசடி செய்­தமை தொடர்பில் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பய ராஜ­பக்ஷ உள்­ளிட்ட 7 சந்­தேக நபர்­க­ளுக்கு எதி­ராக தொட­ரப்­பட்­டுள்ள வழக்கை கடந்த ஜன­வரி 22 முதல் நாளாந்தம் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்ள மூவ­ர­டங்­கிய நிரந்­தர விசேட மேல் நீதி­மன்றம் கடந்த 17 ஆம் திகதி தீர்­ம­னைத்து இருந்­தது. எனினும் அன்­றைய தினம் பிர­தி­வா­திகள் முன்­வைத்த அடிப்­படை ஆட்­சே­பனம் கார­ண­மாக அவ்­வ­ழக்கு நேற்றும் விசா­ர­ணைக்கு வந்­தது.  விஷேட மேல்­நீ­தி­மன்ற தலைமை நீதி­பதி சம்பத் அபேகோன்,  நீதி­ம­தி­க­ளான சம்பத் விஜே­ரத்ன,  சம்பா ஜானகி ராஜ­ரத்ன ஆகியோர் முன்­னி­லையில் நேற்று முற்­பகல்  9.30 மணிக்கு இவ்­வாறு விசா­ர­ணைக்கு வந்­தது.

 விஷேட மேல் நீதி­மன்றின் 2 ஆம் வழக்­காக சட்ட மா அதி­பரால் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள இந்த வழக்கில் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பய,  காணி மிட்பு மற்றும் அபி­வி­ருத்தி கூட்­டுத்­தா­பன முன்னாள் தலைவர் லியன ஆரச்­சிகே பிரசாத் ஹர்ஷான் டி சில்வா,  அக்­கூட்­டுத்­தா­பண பனிப்­பாளர் சபை உறுப்­பி­னர்­க­ளான  கம­எத்தி ரால­லாகே சந்ரா உது­லா­வத்தி கம­ல­தாஸ,  சுதம்­மிக கேமிந்த ஆட்­டி­கல, சமன்­கு­மார அப்­ரஹாம் கலப்­பத்தி,  மாறுக்கு தேவகே மஹிந்த சாலிய, மதம்­பெ­ரும ஆரச்­சி­லாகே ஸ்ரீமத்தி மல்­லிகா குமாரி சேனா­தீர ஆகியோர் ஒன்று முதல் 7 வரை­யி­லான சந்­தேக நபர்­க­ளாக முறையே பெய­ரி­டப்­பட்­டுள்­ளனர்.

 கடந்த 2013 ஆம் ஆண்டு செப்­டம்பர் மாதம் 3 ஆம் திக­திக்கும் 2015 பெப்ரவரி 2 ஆம் திக­திக்கும் இடைப்­பட்ட காலப்­ப­கு­தியில் காணி மீட்பு மற்றும் அபி­வி­ருத்தி கூட்­டுத்­தா­ப­ணத்­துக்கு சொந்­த­மான 33.9 மில்­லியன் ரூபாவை  செல­வ­ழித்து வீர­கெட்­டிய - மெத­மு­லன டீ.ஏ. ராஜ­பக்ஷ யாப­கார்த்த கோபு­ரத்தை நிர்­மா­னிக்க சதி செய்­த­தாக அனைத்து பிர­தி­வா­தி­க­ளுக்கும் எதி­ராக குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.  இவ்­வாறு அந்த ஞாப­கார்த்த கோபுரம், நூத­ன­சா­லையை நிர்­மா­ணிக்கும் போது குறித்த 33.9 மில்­லியன் ரூபாவை தவ­றாக பயன்­ப­டுத்­தி­ய­தாக காணி மீட்பு மற்றும் அபி­வி­ருத்தி ஆணைக் குழுவின் அப்­போ­தைய தலைவர் மற்றும் பனிப்­பாளர் சபை உறுப்­பி­னர்­க­ளான 2 முதல் 6 வரை­யி­லான பிர­தி­வ­ட­ஹிகள் மீது குற்றம் சுமத்­தப்பட்­டுள்­ளது. அதற்கு உதவி ஒத்­தாசை புரிந்­த­தாக முதல் பிர­தி­வ­ட­ஹி­யான கோத்­தா­பய மீதும் 7 ஆம் பிர­தி­வ­டஹி மீதும் குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது. 

1982 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க பொதுச் சொத்து துஷ்­பி­ர­யோக சட்டம் மற்றும் தண்­டனை சட்டக் கோவை­களின் பிர­காரம் இக்­குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்­டி­ருந்­தது

இந் நிலையில் இந்த வழக்கை விசா­ரிக்க விஷேட மேல் நீதி­மன்­றுக்கு 2018 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நீதி­மன்ற கட்­ட­மைப்பு திருத்தச் சட்டம் பிர­காரம் அதி­காரம் இல்லை என்ர பிர­தி­வா­தி­களின் அடிப்­படை ஆட்­சே­பனம்  தொடர்பில் சிரேஷ்ட பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் தமது வாதங்­களை நேற்று முன்­வைத்தார்.

'இந்த மன்­றுக்கு முன்­வைக்­க­பப்டும் வழக்­கு­களை விசா­ரிக்­கவே பிர­தம நீதி­யர்சர் இந்த மன்றை நிய­மித்­துள்ளார்.  அதனால் இங்கு முன்­வைக்­க­ப்படும் வழக்­கு­களை விசா­ரிக்­காமல் இருக்க இம்­மன்­றுக்கு அதி­காரம் இல்லை. 

 இம்­மன்றில் முன்­வைக்கும் ஒரு வழக்கை மீளப் பெற சட்ட மா அதி­ப­ருக்கு அதி­காரம் இல்லை. அதனைப் போன்றே மன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசா­ரிக்­காமல் இருக்க இம்­ மன்­றுக்கும் அதி­கா­ர­மில்லை.  நீதிமன்ற அமைப்பு திருத்தச் சட்டம் பிர­காரம் சில வழக்­கு­களை இம்­மன்றினால் விசா­ரிக்க முடி­யாது என பிர­தி­வா­திகள் தரப்பில் கூறப்­பட்­டாலும், பொதுச் சொத்து துஷ்­பி­ர­யோக சட்டம் மற்றும் கறுப்புப் பண சுத்­தி­க­ரிப்பு சட்­டத்தின் கீழான குற்­றச்­சாட்­டுக்­களை விசா­ரிக்க இம்­மன்­றுக்கு அதி­காரம் உள்­ளது. ' என சுட்­டிக்­காட்­டினார்.

 இதன்­போது கடந்த 17 ஆம் திகதி சிரேஷ்ட பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் முன்­வைத்த , நீதி­மன்றம் ஊடக நாட­கங்­களை அரங்­கேற்றும் இட­மல்ல, மன்­றுக்கு  வரும் சாட்­சி­யா­ளர்­களின் பாது­க­பபை உறுதி செய்­யுங்கள்  ஆகிய வாதங்­களை முன்­னி­ருத்தி வழக்குடன் சம்­பந்­தப்­ப­டாத ஒரு சட்­டத்­த­ரணி முறைப்­பாட்­டாளர் தரப்பு ஒரு­வ­ருக்கு உள்ள கருத்­து­ரி­மையை ரத்து செய்ய முயல்­வ­தாக ஊடகங்­க­ளுக்கு கருத்து வெளி­யிட்­டுள்­ள­தா­கவும்  அதனால் அவ்­வா­றான கருத்­துக்­களை வெளி­யி­டு­வ­தி­லி­ருந்து அவர்­களை தடுத்து உத்­தர்­வி­டு­மாறும் சிரேஷ்ட பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ்  மன்றைக் கோரினார். 

இதன்­போது கோத்­தா­பய ரஜ­பக்ஷ சார்பில் மன்ரில் ஆஜ­ரான சட்­டத்­த­ரணி ரொமேஷ் டி சில்வா, நீன்ட விளக்­க­ம­ளித்து, பிர­தி­வ­ட­ஹிகள் சார்­பி­லான எந்த சட்­டத்­த­ர­னியும் அப்­ப­டி­யான கருத்­தினை ஊடகங்­க­ளுக்கு கூற­வில்லை என கூறினார். 

 இதன்­போது திறந்த மன்றில் பேசிய தலமை நீதி­பதி சம்பத் அபேகோன்,  இம்­மன்­றுக்கு வரும் சட்­டத்­த­ரணிகள் உட்­பட அனை­வரும் மன்றின் கெள­ர­வத்தை பாது­காப்பர் என நம்­பு­வ­தா­கவும், அவ்­வாறு பாது­காக்க தவ­ப­வர்கள் தொடர்பில் தேவை­யான நீதி­மன்ற உத்­தர்­வுகள்  மன்­றினால் வழ்­னக்க முடியும் எனவும் சுட்­டிக்­காட்­டினார். அத்­துடன் சாட்­சி­யா­ளர்­களின் பாது­க­ப்பு தொடர்பில் தேவைப்படும் போது உரிய நேரத்தில் உத்­தரவு­களை பிறப்­பிக்­கவும் இம்­மன்­றினால் முடியும் என அவர் குறிப்­பிட்டார். 

இத­னை­ய­டுத்து மீளவும் மன்றில் வாதிட்டசட்­டத்­த­ரணி ரொமேஷ் டி சில்வா, 

2018 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நீதி­மன்ற கட்­ட­மைப்பு திருத்தச் சட்டம் பிர­காரம் இந்த விஷேட மேல் நீதிமன்றுக்கு பாரிய நிதி மற்றும் பொருளாதார மோசடி தொடர்பிலான வழக்குகளை மட்டுமே விசாரிக்க முடியும்.  இந்த வழக்கு அந்த பட்டியலுக்குள் சேராது. இவ்வழக்கு சாதாரண மேல் நீதிமன்றில் விசாரிக்கப்படல் வேண்டும்.

பிணைமுறி மோசடி போன்ற வழக்குகளையே இந்த மன்றில் விசாரிக்க முடியும். சட்ட மா அதிபர் சார்பில் இவ்வழக்கை இம்மன்று விசாரித்தே ஆக வேண்டும் எனக் கூறினாலும் இவ்வழக்கை தம்மால் விசாரிக்க முடியுமா முடியாதா என்பதை இம் மன்றே தீர்மானிக்க வேண்டும். என வாதிட்டார்.

இதனையடுத்தே இவ்வழக்கை இம்மன்றினால் விசாரிக்க முடியுமா முடியாதா என்ற தீர்ப்பை எதிர்வரும் 11 ஆம் திகதி அறிவிப்பதாக கூறி வழக்கை அத்திகதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33