அமெரிக்காவில் படித்தவர்களுக்கு எச்-1 பி விசாவில் முன்னுரிமை

Published By: Daya

01 Feb, 2019 | 09:09 AM
image

அமெரிக்க பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி படித்தவர்களுக்கு ‘எச்-1 பி’ விசாக்களை பெறுவதில் முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

அமெரிக்காவில் பிற நாடுகளை சேர்ந்தவர்கள் 3 ஆண்டுகள் தங்கி இருந்து பணிபுரிவதற்கு வழங்கப்படுகிற விசா ‘எச்-1 பி’ விசா. ஒவ்வொரு நிதி ஆண்டிலும் 65 ஆயிரம் ‘எச்-1 பி’ விசாக்கள் வழங்கப்படுகின்றன. இதுதவிர அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று பட்டம் பெற்ற 20 ஆயிரம் பேருக்கு அதிகமாக குறித்த விசா வழங்கப்படும். 

‘எச்-1 பி’ விசாக்களில் 70 சதவீதத்துக்கும் மேலாக இந்தியர்களே பெறுகிறார்கள். அதாவது ‘எச்-1 பி’ விசா மூலம் இந்தியாவை சேர்ந்த தொழில்நுட்ப ஊழியர்கள் மற்றும் இந்தியர்களால் நடத்தப்படும் தொழில்நுட்ப நிறுவனங்களே அதிகம் பயன்பெறுகின்றன. 

‘எச்-1 பி’ விசாக்களை பெறுவதற்கான நடைமுறைகளை கடுமையானதாக்க ஜனாதிபதி ட்ரம்ப் முனைப்பு காட்டி வருகிறார். அந்த வகையில் அவரது நிர்வாகம் ‘எச்-1 பி’ விசாக்களை பெற புதிய நடைமுறைகளை அமுல்படுத்தி வருகிறது. 

இந்த நிலையில் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி படித்தவர்களுக்கு ‘எச்-1 பி’ விசாக்களை பெறுவதில் முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை ஏப்ரல் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் என தெரிகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52