பாடசாலை நேரத்தில் தனியார் பிரத்தியேக வகுப்புக்களை தடைசெய்ய அரசு நடவடிக்கை

Published By: R. Kalaichelvan

31 Jan, 2019 | 02:31 PM
image

பாடசாலை நேரத்தில் தனியார் பிரத்தியேக வகுப்புகளில் ( டியூசன்) மாணவர்கள் செல்வதைத் தடுப்பதற்கு புதிய ஒழுங்குவிதிகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் உத்தேசிக்கிறது.

பாடசாலை நேரத்தில் பிரத்தியேக வகுப்புகளில் மாணவர்கள் கலந்துகொள்வதைத் தடுக்கவும் அத்தகைய வகுப்புகள்  நடத்தப்படுவதை தடுக்கவும் அமைச்சரவையில் யோசனை சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவாசம் தெரிவித்தார்.

 பாடசாலை நேரத்தில் தனியார் வகுப்புகளில் க.பொ.த.உயர்தர வகுப்பு மாணவர்கள் கலந்துகொள்வதால் பாடசாலைகளில் உயர்தர வகுப்புகளில் மாணவர்கள் வருகை வீழ்ச்சியடைந்திருப்பதாகக் கிடைக்கப்பபெற்ற பெருவாரியான முறைப்பாடுகளை அடுத்தே இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க உத்தேசிக்ப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார்.

ஆனால், இரண்டாம் தடவை பரீட்சைக்குத் தோற்றுவதற்காக மீட்டல் வகுப்புகளில் பங்கேற்கின்ற மாணவர்களுக்கு இந்த ஒழுங்குவிதிகள் பிரயோகிக்கப்படமாட்டாது.

போயாதினங்களிலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் மதபோதனை வகுப்புகளுக்கு மாணவர்கள் செல்வதை ஊக்குவிக்கும் நோக்கில் அந்த இரு நாட்களிலும் தனியார் பிரத்தியேக வகுப்புக்களை தடைசெய்வதற்கான திட்டத்துக்கு மேலதிகமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

பாடசாலைகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் ஆரிரியர்களையும் அதிபர்களையும் நியமிப்பதற்கும் பெருமளவு நிதி செலவிடப்படுகின்ற போதிலும், பாடசாலைகளில் மாணவர்கள் வருகையில் காணப்படுகின்ற வீழ்ச்சி கல்வி முறையைப் பெரிதும் பாதிக்கின்றது என்று கூறிய அமைச்சர் காரியவாசம்  பாடசாலைகளில் ஆசிரியர்கள் தட்டுப்பாடாக இருப்பதால் பாடவிதானங்களை நிறைவுசெய்யமுடிவதில்லை.

அதன் காரணத்தினாலேயே மாணவர்கள் பிரத்தியேக வகுப்புக்களை நாட நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள் என்ற கல்வித்துறை சார் தொழிற்சங்கங்களின் குற்றச்சாட்டை நிராகரித்தார்.

ஆனால் , பாடசாலைகளில் உள்ள குறைபாடுகள் காரணமாகவே மாணவர்கள் தனியார் வகுப்புக்களினால் கவரப்டுகிறார்கள் என்று தொழிற்சங்கங்கள் கூறுகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47