நாடாளுமன்ற கட்டிடத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  ஆகியோருக்கு இடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்த ராணுவ வீரர்கள் அகற்றப்பட்டு அவர்களுக்கு பதிலாக பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டமை தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.