விமர்சனங்களை முன்வைப்பவர்களுக்கு கூட்டு ஒப்பந்த்தில் என்ன வகிபாகம்  - வடிவேல் சுரேஷ் கேள்வி 

Published By: Vishnu

29 Jan, 2019 | 05:28 PM
image

(எம்.மனோசித்ரா)

பாராளுமன்றத்தில் மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி 9 உறுப்பினர்கள் காணப்படுகின்றனர். எனினும் கூட்டு ஒப்பந்தம் தொழிற்சங்கங்களின் பொறுப்பாகும், அதில் நாம் தலையிட முடியாதெனக் கூறி ஏனையோர் விலகிக் கொண்டனர். இவ்வாறிருக்கையில் கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்களை முன்வைக்கும் ஏனைய சில தரப்பினருக்கு இந்த ஒப்பந்த்தில் என்ன வகிபாகம் உண்டு என இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்க பொதுச் செயளாலரும் இராஜாங்க அமைச்சருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் கடந்த சில மாதங்களாக சுமார் 27 சுற்று பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. அத்தோடு நாடளாவிய ரீதியில் பல்வேறு போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. அனைவரும் ஒருமித்த கோரிக்கை 1000 ரூபா அடிப்படை சம்பளம் என்பதாகவே காணப்பட்டது. எனினும் இடைப்பட்ட ஒரு தொகையினையே எம்மால் பெற்றுக் கொடுக்க முடிந்துள்ளது. 

அடிப்படை சம்பளத்துடன் அனைத்து கொடுப்பனவுகளையும் சேர்த்து 855 ரூபா நாளொன்றுக்கான சம்பளமாக கிடைக்கப்பெறும் அதேவேளை, மேலதிகமாக சராசரியாக 10 கிலோ கொழுந்தினை பறிக்கும் தொழிலாளியொருவருக்கு நாளொன்றுக்கு 1255 ரூபாவினைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும். 

எனினும் இதனை புரிந்து கொள்ளாத சிலர் எம்மில் குறை காண்பதிலேயே தமது கவனத்தைச் செலுத்தி வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47