நுரைச்சோலை மக்களின் ஏமாற்றம்

Published By: Raam

06 Apr, 2016 | 07:38 AM
image

நுரைச்­சோலை அனல் மின்­நி­லையம் தொடர்­பான சூழல்-­தாக்க பகுப்­பாய்வு அறிக்­கையில் பல விட­யங்கள் பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளன. குறிப்­பாக நிலக்­கரி மற்றும் சாம்பல் குடி­யி­ருப்­புக்கள் மற்றும் விவ­சாய நிலங்­களை நோக்கி பர­வாமல் தடுப்­ப­தற்கு பெரிய மரங்கள் நாட்டப்­ப­ட­வேண்டும் . அதேபோன்று கடல் அல்­லது ஏனைய நீர்­நி­லை­களில் அனல் மின் நிலைய கழிவு நீர் கலக்­கப்­ப­டாமல் இருப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும் என வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது. ஆனால் நுரைச்­சோலை அனல் மின் நிலையம் பகுப்­பாய்வு அறிக்­கையின் வலி­யு­றுத்­தல்­களை மீறி­யுள்­ளது. பருவக்­காற்று தரைப்­ப­கு­தி­யினை நோக்கி வீசும் போது , மக்­களின் வாழ்­வா­தா­ரமும் சுகா­தா­ரமும் மிக மோச­மாகப் பாதிக்­கப்­ப­டு­கின்­றது.

அத்­துடன் நிலக்­க­ரி­யினை பயன்­ப­டுத்தும் போது உரு­வாகும் சாம்பல் பொது மக்­களின் இருப்­பி­டங்­களை நோக்கி காற்றில் கலந்து சென்று படி­கின்­றன . இதனால் கடு­மை­யான சுகா­தார பிரச்­சி­னை­களை எதிர் கொள்ளும் நிலை அந்த மக்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்­ளது. அதுமாத்­தி­ர­மன்றி பாட­சாலை மாணவர்­களின் கல்வி நட­வ­டிக்­கையும் இதனால் பாதிக்­கப்­ப­டு­கின்­றது. சீரு­டை­களை கழுவி உலரவைக்க முடி­யாத நிலையில் அப்­பி­ர­தே­சத்தின் மாண­வர்கள் உள்­ளனர். நுரைச்­சோலை அனல் மின்­நி­லை­யத்­தி­லி­ருந்து உரு­வாகும் சாம்பல் சீமெந்து உற்­பத்­திக்குக் கூட பய­னற்­றது என தெரி­வித்து திருப்­பி­ய­னுப்பும் நிலையே இன்று காணப்­ப­டு­கின்­றது.

இதனால் சாம்பல் அனல் மின் நிலை­யத்­திற்கு அருகில் கட­­லுக்கு அண்­மித்த பகு­தியில் கொட்­டப்­ப­டு­கின்­றது. மேலும் சல்பர் வாயு, நைத­ரசன் வாயு, தூசுப் படி­வுகள் போன்­ற­வற்றின் தாக்­கத்­தினை கட்­டுப்­ப­டுத்த எவ்­வி­த­மான நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­படவில்லை. வழ­மைக்கு மாறான வெப்பம் நிலத்து நீரிலும் கடல் நீரிலும் காணப்­ப­டு­வ­தாக அப்­ப­குதி மீன­வர்­களும் பொது மக்­களும் கூறு­கின்­றனர்.

குடிநீருக்­காக பயன்­ப­டுத்­தப்­படும் கிணற்று நீரின் நிறம் வெண்மை கலந்து மஞ்சல் நிற­மாக காணப்­ப­டு­வ­துடன் , அந்த நீரை பயன்­ப­டுத்த முடி­யாத நிலை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் போத்தல்களில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் குடிநீரையே இவர்கள் பயன்படுத்துகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31