ஸ்ரீலங்கன் விமான சேவை தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது

Published By: Vishnu

28 Jan, 2019 | 07:51 PM
image

ஸ்ரீ லங்கன் விமான சேவையில் நிலவும் பிரச்சினைகளை கண்டறிந்து அதனை மீள்கட்டமைப்பதற்கு தேவையான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் பெற்று உரிய சிபாரிசுகளை முன்வைப்பதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட விசேட நிபுணர் குழுவின் அறிக்கை இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

இராஜாங்க அமைச்சர் இரான் விக்கிரமரத்னவின் தலைமையில் கடந்த ஜனவரி 07 ஆம் திகதி ஜனாதிபதியினால் இந்த குழு நியமிக்கப்பட்டது.

நிறுவனத்தினை முடிவுறுத்தல் மற்றும் மீளமைத்தல், முகாமைத்துவ உடன்படிக்கைகள், கடன்களை மீள்கட்டமைப்பு செய்தல் மற்றும் மூலதன உருவாக்கம் ஆகிய மூன்று பிரிவுகளில் இந்த நிபுணர் குழு அறிக்கையில் சிபாரிசுகள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், அதன் மூன்றாவது விடயமான கடன் மீள்கட்டமைப்பு மற்றும் மூலதன உருவாக்கம் தொடர்பில் கவனம் செலுத்தி எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மிகவும் சிறந்ததாகுமென இராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரத்ன இங்கு கருத்து தெரிவித்தார்.

நிறுவனத்தை மீள் கட்டமைப்பதன் ஊடாக சுயாதீன பணிப்பாளர் சபை மற்றும் முகாமைத்துவ சபையை இணங்காணுதல், செயற்திட்ட மாதிரிகளில் திருத்தம் செய்தல், மனித வளங்களை மீள்கட்டமைத்தல், சுயாதீன பெறுகை நடவடிக்கையை முன்வைத்தல், நிறுவன இலச்சினையை மேம்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பாக கண்டறிதல் போன்ற விடயங்களில் கவனம் செலுத்தி செயற்பட வேண்டுமென குறித்த அறிக்கையில் சிபாரிசுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

குழுவின் அறிக்கை அதன் தலைவர் இராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரத்னவினால் கையளிக்கப்பட்டதோடு, அமைச்சரவை அந்தஸ்து அல்லாத அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா உள்ளிட்ட ஏனைய குழு உறுப்பினர்கள் இதன்போது வருகை தந்திருந்தனர். குறித்த காலத்திற்குள் குழுவின் அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்தமை தொடர்பில் இதன்போது ஜனாதிபதி அதன் உறுப்பினர்களுக்கு தமது நன்றியை தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02