அவுஸ்திரேலியாவினால் இலங்கை கடலோர பாதுகாப்பு படைக்கு மூன்று துறைமுக படகுகள் 

Published By: Vishnu

27 Jan, 2019 | 03:16 PM
image

அவுஸ்த்ரேலியாவினால் இலங்கை கடலோர பாதுகாப்பு படைக்கு மூன்று மூன்று துறைமுகு படகுகள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வு கொழுப்பு துறைமுகத்தில் உள்ள இலங்கை கடற்படை தளத்தில் நேற்று முன்தினம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்  ருவான் விஜேவர்தன தலைமையில் இடம்பெற்றது.

இத் துறைமுக படகுகள் 2017 ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட அவுஸ்திரேலிய பிரதமர் மால்கம் ட்ருன்பலினால் இலங்கை கடலோர பாதுகாப்பு படைக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைய வழங்கப்பட்டுள்ளன.

இதற்கமைவாக, குறித்த படகுகளை இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் பிரையஸ் ஹட்ஷ்சன் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

பின்னர், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட அதிதிகள் படகுகளை பார்வையிட்டனர். 

இதன்போது கடலோர பாதுகாப்பு படையின் பணிப்பாளர் நாயகத்தினால் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகருக்கு நினைவுச்சின்னம் ஒன்றும் பரிசளிக்கப்பட்டது.

6.6மீற்றர் நீளமான இப்படகுகள், 34 நொட் உயர் வேகத்தில் பயணிக்கக்கூடிய திறன் கொண்டதுடன் ரேடார் சமிஞ்சை உபகரணங்களையும் கொண்டுள்ளன.

இந் நிகழ்வில் அவுஸ்திரேலியாவின் உள்நாட்டலுவல்கள் தொடர்பான ஆலோசகர் அமைச்சர் தாரா கொவனாக், பாதுகாப்பு படைககளின் பிரதம அதிகாரி, கடற்படை தளபதி, கடலோர பாதுகாப்பு படையின் பணிப்பாளர் நாயகம், அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள், சிரேஷ்ட கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு படை அதிகாரிகள் உள்ளிட்ட அதிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 10:50:13
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28