ஞானசாரரை விடுதலை செய்வதால் ஜனாதிபதி அச்சமடையத் தேவையில்லை - இலங்கை இந்து சம்மேளனம்

Published By: Digital Desk 4

26 Jan, 2019 | 09:24 PM
image

(நா.தனுஜா)

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கி அவரை விடுதலை செய்வதனால் நாட்டில் குறித்ததொரு மக்கள் தொகையினரின் வாக்குகள் இல்லாது போகும் என ஜனாதிபதி அஞ்சினால், அந்த எண்ணத்தை தற்போதே நீக்கிக்கொள்ள வேண்டும். நாட்டின் நலனைக் கருத்திற்கொண்டு செயற்பட்ட ஒரு தேரரை விடுதலை செய்வதனை மக்கள் எதிர்க்க மாட்டார்கள். 

ஞானசார தேரர் கொலை, கொள்ளை போன்ற குற்றங்களைப் புரிந்தவர் அல்ல. நாட்டிற்காகவும், நாட்டின் நலனுக்காகவும், தேசிய பாதுகாப்பிற்காகவும் தொடர்ந்து குரல்  கொடுத்து வந்த ஒருவராவார். எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுதந்திர தினத்திற்கு முன்னர் ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கி அவரை விடுதலை செய்ய வேண்டும் என இலங்கை இந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது.

பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு சுதந்திர தினத்திற்கு முன்பதாக ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி இலங்கை இந்து சம்மேளனம், இந்து இளைஞர் அமைப்பு மற்றும் இலங்கை குருக்கள் பேரவை என்பன இணைந்து நேற்று சனிக்கிழமை கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது. குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட இலங்கை இந்து சம்மேளனத்தின் தலைவர் டி.அருண்காந்த் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

சுதந்திர தினத்திற்கு முன்னர் பொதுமன்னிப்பின் அடிப்படையில் ஞானசார தேரரை விடுதலை செய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்விடயத்தை தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம். இந்நாட்டில் வாழும் இந்துக்களின் சார்பாக இக்கோரிக்கையை முன்வைக்கின்றோம்.

கடந்த காலங்களில் பல்வேறு அரச சார்பற்ற அமைப்புக்களாலும், மத அமைப்புக்களாலும் இந்துக்கள் வேறு மதங்களுக்கு மாற்றப்படுகின்ற அச்சுறுத்தல் நிலையொன்று காணப்பட்டது. அவ்வேளையில் ஞானசார தேரர் நாடு முழுவதிலும் மத மாற்றத்திற்கு எதிராக மேற்கொண்ட விழிப்புணர்வு பிரசாரங்களால் விழிப்புணர்வடைந்த இந்துக்கள் மதமாற்ற முயற்சிகளில் இருந்து தம்மைக் காத்துக்கொண்டனர். அதேபோன்று நாட்டின் தேசிய பாதுகாப்பு குறித்தும் பெரிதும் விழிப்புணர்வு பெற்றனர்.

ஞானசார தேரர் கொலை, கொள்ளை போன்ற குற்றங்களைப் புரிந்தவர் அல்ல. நாட்டிற்காகவும், நாட்டின் நலனுக்காகவும், தேசிய பாதுகாப்பிற்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவராவார். அத்தகைய ஒருவரே தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றார். நாட்டிற்காக போராடியதாலேயே அவருக்கு இன்று இந்நிலைமை ஏற்பட்டுள்ளது.

பொதுமன்னிப்பு வழங்கி ஞானசார தேரரை விடுதலை செய்வதனால் நாட்டில் குறித்ததொரு மக்கள் தொகையினரின் வாக்குகள் இல்லாது போகும் என ஜனாதிபதி அஞ்சினால், அந்த எண்ணத்தை தற்போதே நீக்கிக்கொள்ள வேண்டும். நாட்டின் நலனைக் கருத்திற்கொண்டு செயற்பட்ட ஒரு தேரரை விடுதலை செய்வதனை மக்கள் எதிர்க்க மாட்டார்கள். எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுதந்திர தினத்திற்கு முன்னர் ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கி அவரை விடுதலை செய்ய வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34