தமிழகத்தில் தஞ்சமடைந்த 83 இலங்கை அகதிகள் நாடுதிரும்பவுள்ளனர்

Published By: Daya

26 Jan, 2019 | 05:12 PM
image

இந்தியாவின் தமிழகத்திலிருந்து 83 இலங்கை அகதிகள் நாடு திரும்பவுள்ளனர். 

இம்மாதம் 31 ஆம் திகதி 39 குடும்பங்களைச் சேர்ந்த 83 பேர் நாடு திரும்பவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தியாவிலிருந்து இரு விமானங்களில் இவர்கள் நாடு திரும்பவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.

இவ்வாறு நாடு திரும்பவுள்ளவர்களில் 34 ஆண்களும் 49 பெண்களும் உள்ளடங்குகின்றனர். 

யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே இம்மாதம் 31 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளனர்.

இவர்களுக்கான இலவச விமான பயணச்சீட்டு வழங்கப்படுவதுடன், போக்குவரத்து கொடுப்பனவு உள்ளிட்ட மானியங்களும் வழங்கப்படவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, யுத்த காலத்தில் தமிழகத்தில் தஞ்சமடைந்த இலங்கை அகதிகளில் சுமார் 65,000 பேர் அகதி முகாம்களிலும் 35,000 பேர் வௌியிடங்களிலும் தங்கியுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் வே. சிவஞானசோதி மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08