இனந்தெரியாதோரால் தீக்கிரையாக்கப்பட்ட குடிசைகள்

Published By: Digital Desk 4

26 Jan, 2019 | 04:41 PM
image

 ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தினை அண்டியப்பகுதியில்  இரு குடிசைகள் இன்று(26) அதிகாலை வேளையில் இனந்தெரியாதோரால் தீயிட்டுக் கொழுத்தப்பட்டுள்ளன.

காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்குச் சொந்தமான காணியில் கடந்த எட்டு வருடங்களாக வசித்து வரும் குடியிருப்பாளர்களின் குடிசைகளே இவ்வாறு தீயிட்டுக் கொழுத்தப்பட்டுள்ளன.

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் அங்கீகாரத்தினைப் பெற்று மேட்டு நிலப் பயிர்ச் செய்கையினை மேற்கொண்டு தமது ஜீவனோபாயத்தினை கடத்தி வரும் வருமானம் குறைந்த குடும்பங்களின் குடிசைகள் இன்று அதிகாலைவேளையில் தீயிடப்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

மோட்டார் சைக்கிளில் நள்ளிரவு வேளையில் வந்த கும்பலொன்றே குடிசைகளுக்கு தீயிட்டிருக்கலாம் என இப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். தீயிடப்பட்ட சந்தர்ப்பத்தில் இக்குடிசைகளுக்குள் எவரும் இல்லை எனவும், அச்சந்தர்ப்பத்தில் இக்குடிசைகளில் வசித்து வந்தவர்கள் உறவினர்களில் இல்லங்களுக்குச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தீயிட்டுக் கொழுத்தப்பட்ட இக்குடிசைகளுக்குள் பெறுமதிமிக்க உடைமைகள் தீயில் அழிந்துள்ளதாகவும் இதனால் பெருந்தொகை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் குடிசை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39