பாராளுமன்றத்தில் சண்டித்தனமாக நடந்துகொள்ளும் பிரதமரும் நாட்டில் நடக்கும் விடயங்கள் எதுவும் அறியாத ஜனாதிபதியும் நாட்டுக்கு தேவைதானா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் என பெங்கமுவே நாலக்க தேரர் தெரிவித்தார்.

சரத்பொன்சேகாவை கொலைசெய்ய திட்டமிட்ட மொரிஸை விடுதலை செய்வது நாட்டின் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலாகும் எனவும் தெரிவித்தார்.

புத்திஜீவிகள் மற்றும் நிபுணத்துவர்களின் குரல் அமைப்பு நேற்றைய தினம்  கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கலந்த கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

(எம்.ஆர்.எம்.வஸீம்)