"எதிர்க் கட்சித் தலைவர்" - சபையில் இன்று அங்கீகாரம் கோரிய சம்பந்தன்

Published By: R. Kalaichelvan

25 Jan, 2019 | 03:06 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

பிரதான எதிர்க்கட்சி தலைவர் பதவி தமக்குரியது என சபையில் மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் அங்கீகாரம் கோரினார்.

எனினும் எதிர்க்கட்சி தலைவர் பதவி மஹிந்த ராஜபக்ஷவிற்கே உரியது என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையில் வாதாடினர். இந்நிலையில் புதிய அரசியல் அமைப்பு மூலமே இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என சபாநாயகர் மற்றும் சபை முதல்வர் தெரிவித்தனர். 

பாராளுமன்றத்தில் இன்று காலை சபை கூடிய வேளையில் ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்து கேள்வி எழுப்பினார். இதன் போது,  ஜனாதிபதி அரசாங்கத்தின் தலைவராகவும், அமைச்சரவை தலைவராகவும் உள்ளார். 

இப்போது எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ,  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர். ஒரே கட்சியின் தலைவர்  அரசாங்கத்தின் தலைவராகவும்  அக்கட்சியின்  சிரேஷ்ட உறுப்பினர்  எதிர்க்கட்சி தலைவராகவும்  உள்ளனர்.  

அவர் எதிர்க்கட்சி தலைவராக வந்திருக்காவிட்டிருந்தால் நாம் இது குறித்து பேசியிருக்க மாட்டோம். எனினும் இப்பொது ஒரு முரண்பாடு காணப்படுகின்றது.  

பாராளுமன்ற நிலையியல் கட்டளை 334-335 இன் படி பாராளுமன்ற நடவடிக்கைகள் எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட வேண்டும். 

அது சபையில் இரண்டாவது பாரிய கட்சியாக இருக்க வேண்டும். அதில் ஒருவரேனும் அரசாங்கத்துடன் அங்கம் வகிக்கக்கூடாது என குறிப்பிடப்படுகின்றது. 

ஆகவே இந்த பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பே காணப்படுகின்றது.  அரசியல் அமைப்பே நாட்டி உயரிய ஒன்று, இது தனி நபர்களின் தேவைக்காக பயபடுத்தக்கூடாது. அரசியல் அமைப்பை வைத்துக்கொண்டு  சிறுபான்மை கட்சிகளையும் மக்களையும்  பிழையாக வழிநடத்தப்படக்கூடாது. சிறுபான்மை மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:31:22
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12