இசை நிகழ்ச்சியில் பதற்றம் : 19 பேர் கைது

Published By: Daya

25 Jan, 2019 | 03:02 PM
image

பண்டாரவளை பொது மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்டு 7 பேர் காயங்களுக்குள்ளாகிய நிலையில், பண்டாரவளை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் குறித்து, பண்டாரவளைப் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட புகாரையடுத்து, குறிப்பிட்ட பொது மைதானத்திற்கு விரைந்த பொலிசார், முப்பது இளைஞர்களைக் கைது செய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் விசாரணையின் பின்னர், பண்டாரவளை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவரென்று, பண்டாரவளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சந்தன ஜயதிலக்க தெரிவித்தார்.

பண்டாரவளை பொது மைதானத்தில் உள்ளுர் பாடகர்கள் சிலரும், கொழும்பு பிரபல பாடகர்கள் சிலரும் கலந்து கொண்ட இசை நிகழ்ச்சி நடைபெற்றது. 

இவ்வேளையில் நிகழ்ச்சியின் இறுதியில் இசை நிகழ்ச்சிக்கு பார்வையாளர்களாக கலந்துகொண்ட மதுபோதையில் இருந்த சிலருக்கும், இசை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்குமிடையே வாய்த்தர்க்கம், தாக்குதல்களும், மோதல்களும் ஏற்பட்டன. 

இச்சம்பவத்தில் இசை உபகரணங்கள் பலவும், பலத்த சேதத்திற்குள்ளாகின. இந்நிலையில் இசை நிகழ்ச்சியில் பாடகர்களாக வந்திருந்த பலரும் ஓடித் தப்பினர். உள்ளுர் இளைஞர்கள் இப்பாடகர்களை துரத்தி துரத்தி தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர்.

இவ் இசை நிகழ்ச்சி, பண்டாரவளை மாநகர சபையின் அனுமதியுடன் நிதி சேகரிப்புக்காக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சந்தேக நபர்களை பண்டாரவளை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இம்மாதம் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38