பஸ்ஸில் முறைகேடான செயற்பாடுகளால் பொதுமக்கள் அசொளகரியம்

Published By: R. Kalaichelvan

25 Jan, 2019 | 11:40 AM
image

ஹட்டன் மற்றும் பலாங்கொட பிரதான வீதியினூடாக செல்லும் பலாங்கொட தனியார் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுள் ஒரு சிலர், பேருந்துகளில் முறைகேடான முறையில் நடந்துக்கொள்வதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

அதாவது சில பயணிகள் மது அருந்திவிட்டு செல்லும் நிலையில் பெண்களிடமும் பாடசாலை மாணவர்களிடமும் முறைகேடான முறையில் நடந்துகொள்வதாகவும் இதனால் பெண்கள் மற்றும் சிறுவர்கள், மாணவர்கள் உடல் உள ரீதியான துன்புறுத்தலுக்குள்ளாகுவதாகவும் பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதை பேருந்து சாரதிகள், நடத்துனர்கள் அறிந்திருந்தும் அதற்கு எதிராக எந்தவொரு செயற்பாடுகளையும் அவர்கள் முன்னெடுப்பதில்லை என பொது மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

இது விடயமாக தனியார் பேருந்து சபை முன்வந்து இவ்வாறான சீர்கேடுகளை நீக்க முன்வருவதுடன், இச்சேவையில் ஈடுபடும் பேருந்து நடத்துனர்கள் மற்றும் சாரதிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்வது அவசியம் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மேலும் இது விடயமாக பொகவந்தலாவை பொலிஸ் நிலைய அதிகாரி கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22