திலகராஜின் வேண்டுகோளையடுத்து மழுப்பிய வடிவேல் சுரேஷ்

Published By: Vishnu

24 Jan, 2019 | 07:05 PM
image

(ஆர்.யசி, எம். ஆர்.எம்.வசீம்)

எந்தக் கம்பெனியும் நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறுவது பொய்,  அவ்வாறு நஷ்டத்தில் இயங்குவதாக கூறும் கம்பெனிகள் உடனடியாக தமது கம்பெனிகளை அரசாங்கத்திடம்  ஒப்படைக்க வேண்டும். அவற்றை ஏற்க அரசாங்கம்  தயார் என பெருந்தோட்ட இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

எனினும் அந்த அறிவிப்பை எழுத்துமூலம் தோட்டக் கம்பனிகளுக்கு கொடுக்குமாறு  திலகராஜ்  எம்.பி.கோரியபோது மழுப்பி விட்டார். 

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற தோட்டத்தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள அதிகரிப்பு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் பெருந் தோட்ட இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் உரையாற்றிய வேளையில் அப்போது மிகவும் உணர்ச்சிகரமாகப் பேசிய அவர் எந்தக்  கம்பெனியும் நஷ்டத்தில்  இயங்குவதாகக் கூறமுடியாது. அவ்வாறு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றால்  அந்தக் கம்பெனிகளை உடனடியாக அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும். அவற்றை ஏற்க அரசாங்கம் தயாராக உள்ளது  என்பதனை பெரும்தோட்ட இராயங்க அமைச்சர் என்ற வகையில் இங்கு கூறுகின்றேன் என்றார். 

இதன்போது குறுக்கிட்டு ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய திலகராஜ் எம்.பி. நீங்கள் இப்போது கூறிய விடயத்தை எழுத்து மூலம் 22 கம்பெனிங்களுக்கும் அறிவிக்க முடியுமா எனக் கேட்டார் 

இதற்கு பதில் தெரிவித்த  இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ்:- இவ்விடயத்தை நான் பாராளுமன்றத்தில் பேசியுள்ளேன். அது ஹன்சாட்டில் வரும். அதனைவிட எழுத்து மூல அறிவிப்பு பெரிதல்ல என்றார்.

இதனையடுத்து  மீண்டும் ஒழுங்குப்பிரச்சினை  எழுப்பிய திலகராஜ் எம்.பி.:- எந்தக்  கம்பெனியும் நஷ்டத்தில்  இயங்குவதாகக் கூறமுடியாது. அவ்வாறு நஷ்டம் எனக்கூறும்  கம்பெனிகளை உடனடியாக அரசாங்கத்திடம்  ஒப்படைக்க வேண்டும்.அவற்றை ஏற்க அரசாங்கம் தயார் என்பதனை பெரும்தோட்ட இராஜாங்க அமைச்சர் என்ற வகையில் இங்கு கூறுகின்றேன் என தெரிவித்து பேசிய உரை அடங்கிய ஹன்சாட் அறிக்கையை 22 கம்பெனிகளுக்கும் அனுப்புமாறு சபாநாயகரிடம் கோருகின்றேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவை தாமதம்

2024-03-29 12:00:05
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20