யாழிற்கு முதல் பயணத்தை ஆரம்பிக்கிறது "உத்ரதேவி"

Published By: R. Kalaichelvan

24 Jan, 2019 | 06:47 PM
image

(இரோஷா வேலு) 

இந்தியாவினால் வழங்கி வைக்கப்பட்ட புதிய புகையிரதமான உத்ரதேவியை பயணாளர்களிடம் கையளிக்கும் வைபவம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 27 ஆம் திகதி கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இடம்பெற்று தனது முதல் பயணத்தை யாழ்ப்பாணம் காங்கேசன்துறையை நோக்கி பயணிக்கவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் சேவைகள் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போக்குவரத்து மற்றும் சிவில் சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணத்துங்க மற்றும் இந்திய உயர் ஸ்தானிகர் தரங்ஜித்சிங் சந்துவின் தலைமைத்துவத்தின் கீழ் குறித்த புகையிரதமானது தனது முதல் பயணத்தை கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து காலை 6.30 மணிக்கு தனது பயணத்தை ஆரம்பிக்கும். 

இந்திய இலங்கை நல்லிணக்க உறவின் கீழ் வழங்கி வைக்கப்பட்டுள்ள இப்புகையிரதம் பரீட்சார்த்த ஒட்டத்தை வெற்றிக்கரமான முறையில் நிறைவு செய்து பயணாளர்களின் கரங்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 இப்புகையிரத்தில் 724 பயணிகள் பயணிக்க கூடிய வகையில் 6 பெட்டிகள் காணப்படுகின்றது. எஸ்13 என்ற இப்புகையிரம் உத்ரதேவி என பெயரிடப்பட்டுள்ளது. 

மேலும் இங்கிருந்து புறப்படும் இப்புகையிரத்தின் முதல் பயணத்தின் போது கொழும்பிலிருந்து வடக்கு தெற்கை இணைக்கும் முகமாக வடக்கின் பாடசாலை மாணவர்களுக்கு பரிசுப் பொதிகளை சுமந்து செல்லவுள்ளது. இதற்கு பொது மக்களும் தமது ஒத்துழைப்பினை வழங்கி வைக்க முடியும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51