(ஆர்.விதுஷா)
வீரக்கெடிய - ஹக்குருவெல பகுதியில் வியாபார நிலையத்தை உடைத்து கொள்ளையடித்தமை தொடர்பில் இளைஞரொரவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் தங்கல்லை குற்ற புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே மேற்படி நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் 29 வயதடைய தெல்வெல்ல, ஹக்குருவெல பகுதியை சேர்ந்தவரென விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
அவரிடமிருந்து, வியாபார நிலையங்களில் கொள்ளையிட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கைப்பற்றப்பட்ட பொருட்கள் வீரகெட்டிய பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.