சர்வதேச கிரிக்கெட் சபையால் வெளியிடப்பட்டுள்ள இருபதுக்கு -20 உலக அணிக்கு விராட் கோலி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாண்டுக்கான உலகக் கிண்ண இருபதுக்கு - 20 உலக அணி வீரர்கள் விபரம் ஐ.சி.சி. யினால் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் இலங்கை அணி வீரர்கள் எவரும் உள்ளடக்கப்படவில்லை. 

12 பேரடங்கிய இருபதுக்கு -20 உலகக் கிண்ண உலக அணியில் இங்கிலாந்து வீரர்கள் 4 பேரும் இந்திய அணி வீரர்கள் 2 பேரும் மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர்கள் 2 பேரும் அவுஸ்திரேலிய வீரர் ஒருவரும் பங்களாதேஷ் வீரர் ஒருவரும் நியுஸிலாந்து வீரர் ஒருவரும்  தென்னாபிரிக்க அணி வீரர் ஒருவரும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

அந்தவகையில்  இங்கிலாந்தின் ஜெசன் ரோய், ஜோய் ரூட்,  ஜோஸ் பட்லர்,  டேவிட் வில்லி, தென்னாபிரிக்காவின் குயின்டன் டீ கொக் விக்கெட் காப்பாளர்,  இந்திய அணியின் விராட் கோலி அணித் தலைவர்,  அவுஸ்திரேலியாவின் ஷேன் வொட்சன், மேற்கிந்தியத் தீவுகளின் அன்று ரஸல், சமுவெல் பத்ரி, இந்தியாவின் நெஹ்ரா, நியுஸிலாந்தின் மிச்சல் சன்ற்னெர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதேவேளை, 12 ஆவது வீரராக பங்களாதேஷ் அணி வீரர் முஸ்பிகுர் ரஹ்மான் இடம்பெற்றுள்ளார்.