வீரகேசரியுடன் கைகோர்த்த 'தினத்தந்தி'

Published By: Vishnu

24 Jan, 2019 | 09:09 AM
image

தமிழ்­கூறும்  நல்­லு­ல­கத்­திற்கு   புது­மை­களை படைத்­து­வரும்  வீர­கே­சரி நாளிதழ்  இன்­று­ முதல்  புதிய அத்­தி­யா­யத்தில்  காலடி எடுத்து வைக்­கி­றது.  இந்­தி­யாவில் அதிக  விற்­ப­னையில் உள்ள தமிழ் நாளி­த­ழான தினத்­தந்தி  இன்று முதல்  எமது வாச­கர்­க­ளுக்­காக  எல்லை தாண்­டி­வந்து எம்­மோடு   இணைந்­து­கொள்­கி­றது.  இன்­றி­லி­ருந்து  எட்­டுப்­பக்­கங்­களைக் கொண்ட  தினத்­தந்தி  இணைப்­பிதழ்  உங்கள் அபி­மான வீர­கே­சரி நாளி­த­ழுடன்  வெளி­வ­ர­வுள்­ளது. 

 

திங்கள் முதல் சனிக்­கி­ழமை வரை  நாள்­தோறும்   இந்த  இணைப்­பிதழ் வெளி­வரும் என்­பதை எமது வாச­கர்­க­ளுக்கு   மகிழ்ச்­சி­யுடன்  அறி­யத்­த­ரு­கின்றோம்.    

தினத்­தந்தி  நாளிதழ் 1942 ஆம் ஆண்டு சி.பா. ஆதித்­த­னாரால்  மது­ரையில்  ஆரம்­பிக்­கப்­பட்டு  இற்­றைக்கு  76 ஆண்­டுகள் இந்­திய வாழ்   தமிழ் பேசும் மக்­க­ளுக்­காக  தனது ஊட­கப்­ப­ணி­யினை  செய்து வரு­கின்­றது.   16 நக­ரங்­களில் தனது பிர­சு­ரங்­களை அச்­சிட்டு வெளி­யி­டு­வது மட்­டு­மன்றி  ஐக்­கிய அரபு நாடான டுபா­யிலும்   சர்­வ­தேச   பத்­தி­ரி­கை­யாக  அச்­சிட்டு வெளி­யி­டப்­பட்டு வரு­கின்­றது.  

இதே­போன்றே   89 ஆண்­டு­க­ளாக இலங்கை வாழ் தமிழ்  பேசும் மக்­க­ளுக்கு தனது ஊட­க­சே­வையை ஆற்­றி­வரும் வீர­கே­சரி   தினத்­தந்­தி­யுடன்  இணைந்து   உயர்ந்த  ஊட­க­சே­வையை எமது அபி­மான வாச­கர்­க­ளுக்கு வழங்க  முன்­வந்­தி­ருக்­கின்­றது.   தினத்­தந்­தி­யுடன் இணைந்து  வாச­கர்­க­ளுக்­கான சேவையை வழங்­கு­வ­தற்­கான  செயற்­றிட்டம் இன்­று­முதல் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது.   தமிழால் ஒன்­றி­ணைந்து தமிழை  வளர்க்கும் எண்­ணப்­பாட்­டுடன்   இந்த செயற்­றிட்டம்  ஆரம்­பிக்­கப்­ப­டு­கின்­றது. 

 எமது அயல்­நா­டான இந்­தி­யா­வா­னது இலங்­கை­யுடன் பொரு­ளா­தார, கலா­சார,  சமூக ரீதியில்   பாரிய பிணைப்­புக்­களைக்  கொண்­டுள்ள நாடாகும்.  எனவே அங்கு இடம்­பெ­று­கின்ற  அர­சியல், சமூகம் சார்ந்த விட­யங்­க­ளையும் முக்­கிய     நிகழ்­வு­க­ளையும் அறிந்­து­கொள்ளும் ஆர்வம்  எமது வாச­கர்­க­ளுக்கு இருக்­கின்­றது. அதனை  நிவர்த்தி செய்யும் நோக்­கி­லேயே   இந்தப் புதிய முயற்­சியை வீர­கே­சரி நாளிதழ்  ஆரம்­பித்­தி­ருக்­கின்­றது.     இந்­தி­யாவின் குறிப்­பாக   தமி­ழ­கத்தின்   அர­சியல், சமூக , பொரு­ளா­தார, கலா­சார, தொழில்­நுட்ப, சினிமா துறை­சார்ந்த  விட­யங்­க­ளையும் பல்­சுவை அம்­சங்­க­ளையும்   இன்றும் முதல் கேச­ரி­யுடன் தினத்­தந்தி இணைப்­பிதழ்  தாங்­கி­வரும் என்­பதை மகிழ்­வுடன் அறி­விக்­கின்றோம்.  

எமது ஈழத்­தி­ரு­நாட்டின்   எழுத்­து­நடை, மொழி­நடை என்­பன  தமி­ழ­கத்தின்  எழுத்து, மொழி நடை­க­ளுடன்  ஒப்­பி­டு­கையில் வித்தியாசமானவை.  ஆனாலும்   தமிழக    எழுத்து நடையில்   தினத்தந்தி  அதே பாணியில்  வெளிவரும் என்பதை   எமது  வாசகர்களுக்கு   அறியத்தருகின்றோம்.  தினத்தந்தி இணைப்பிதழ் மூலம்  எமது  வாசகர்கள்  பயன்பெறுவார்கள் என்பது   எமது  அசைக்க முடியாத   நம்பிக்கையாக உள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04