ரஷ்யாவின் முன்னணி அரசியல் தலைவர்களில் ஒருவராக விளங்குபவர் மிக்கைல் காஸ்யனோவ்  கடந்த 2000 முதல் 2004ம் ஆண்டு வரை அந்நாட்டின் பிரதமராக இருந்துள்ளார்.

இந்நிலையில் இவரும் இங்கிலாந்தை சேர்ந்த பத்திரிகையாளரும் சமூக ஆர்வலருமான நடாலியா பெலிவினும் பாலியல் உறவு வைத்துகொள்வது தொடர்பான வீடியோ ஒன்று  வெளியாகியது பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்ய அரசாங்கத்துக்கு ஆதரவான என் தொலைகாட்சியில்  இந்த வீடியோ ஒளிபரப்பாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. மாஸ்கோவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருவரும் தங்கியிருந்தபோது ரகசிய காமெரா  மூலம் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன.

வீடியோவில் உள்ள பெண் ஊடகவியலாளர் நடாலியா தற்போதைய ரஷ்ய அரசாங்கத்துக்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறவர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த வீடியோவை எடுத்தது யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகாத நிலையில் புதினின் ஆதரவாளர்கள் மூலமே இந்த விடியோ கசிந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராக அரசியல் செய்பவர்களை அழிப்பதற்கு மேற்கொள்ளப்படும் சதிதான் இது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இங்கிலாந்து குடியுரிமை பெற்ற நடாலியாவை இழிவுப்படுத்தும் செயல் இது என்று ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் இந்த வீடியோவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

 எனினும் இந்த வீடியோ தொடர்பாக மிக்கைல் இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.