தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்குமாறு வலியுறுத்தி  கொழும்பில் ஆர்ப்பட்டம் 

Published By: Vishnu

23 Jan, 2019 | 07:28 PM
image

(எம்.மனோசித்ரா)

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்குமாறு வலியுறுத்தி ' 1000 ரூபா இயக்கம்" இன்றைய தினம் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுத்திருந்தது. 

இந்த இயக்கத்தின் கோரிக்கைக்கு இணங்க நாடளாவிய ரீதியில் பல மாவட்டங்களிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், கொழும்பில் பல்வேறு சிவில் அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்,

தொழிலாளர்களின் நாளொன்றுக்கான அடிப்படை சம்பளம் 1000 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும். கம்பனிகள் அதிகரிப்புக்கு மறுப்பு தெரிவிக்கும் பட்சத்தில் தொழிற்சங்கங்கள் கூட்டு ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதோடு, அரசாங்கம் இந்த விடயத்தில் தலையிட்டு தொழிலாளர்களுக்கு நிரந்தர தீர்வினைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தனர். 

கொழும்பு ஐந்துகாமம் சந்தியிலிருந்து ஆரம்பமான ஆர்ப்பாட்ட பேரணி, மல்வத்து வீதிக்கூடாகச் சென்று கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாகவுள்ள பிரதான வீதியை சென்றடைந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராகவும், அதில் கைசாத்திடும் தொழிற்சங்கங்களுக்கு எதிராகவும், கம்பனிகள் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பட்டன. 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பொளத்த மற்றும் கத்தோலிக்க மதகுருமார்களும் ஆதரவளித்திருந்தனர். ஒவ்வொரு முறையும் தொழிற்சங்கங்கள் 1000 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குவதாகக் கூறி மக்களை ஏமாற்றி வருகின்றன. 

எனினும் இம்முறை 625 ரூபாய் அடிப்படை சம்பளத்திற்கு கையெழுத்திடுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன. அதற்கு ஒரு போதும் இடமளிக்கப்பட மாட்டாது எனவும், அவ்வாறு கூட்டு ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் சந்தர்ப்பத்தில் நாடளாவிய ரீதியில் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் ஆர்ப்பாட்டக்கார்கள் எச்சரித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லிந்துலையில் வர்த்தக நிலையம் உடைத்து கொள்ளை

2024-03-19 16:18:54
news-image

கோப் குழுவிலிருந்து சரித ஹேரத் இராஜினாமா!

2024-03-19 15:59:04
news-image

“ குபுகட பச்சயன்” குற்றக் கும்பலை...

2024-03-19 16:00:44
news-image

கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

2024-03-19 16:00:14
news-image

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் முழுநாள் வேலைநிறுத்தம்!

2024-03-19 16:06:01
news-image

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழில்...

2024-03-19 15:38:30
news-image

பிரபல பாதாள உலக, போதைப்பொருள் கடத்தல்...

2024-03-19 15:28:47
news-image

நானுஓயாவில் கஞ்சா போதைப்பொருளுடன் லொறி சாரதி...

2024-03-19 14:59:13
news-image

கோட்டாவின் நூலை வாசிக்கவில்லை - வாசிக்கும்...

2024-03-19 14:42:35
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் 5...

2024-03-19 14:44:49
news-image

தயாசிறி ஜயசேகரவும் கோப் குழுவிலிருந்து விலகினார்!

2024-03-19 14:37:52
news-image

சுங்கத் திணைக்கள அதிகாரிகளின் சட்டப்படி வேலை...

2024-03-19 14:30:11