பிரித்தானியான அரசாங்கத்தின் தெற்காசிய விவகாரங்களுக்கான தலைமை அதிகாரியும் இந்திய விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பாளருமான பெர்கஷ் அல்ட் ( Fergus Auld ) -  வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இச் சந்திப்பு இன்று புதன்கிழமை (23-01.2019) முற்பகல் வடக்கு மாகாண முதலமைச்சரின் அமைச்சு செயலகத்தில் இடம்பெற்றது.