ஆரம்ப கைத்துதொழில் அமைச்சர் தயா கமகே, ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட பிரதித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று கூடியுள்ள அக் கட்சியின் செயற்குழுவிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. 

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில், தேசிய ஊழியர் சங்கத்தின் தலைவராக அமைச்சர் அகிலவிராஜ் காரியவசமும் தேசிய வாலிபர் முன்னணியின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜெயவர்தனவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத் தலைவராக அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவும் லக் வனிதா முன்னணியின் தலைவியாக அனோமா கமகேயும் நியமிக்கப்பட்டுள்ளனர்.