நீதிமன்றில் ஆஜராகுமாறு சரத் என் சில்வாவிற்கு உத்தரவு

Published By: Daya

23 Jan, 2019 | 01:00 PM
image

முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவிற்கு உயர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றம் அவமதிப்பு தொடர்பில் முன்னாள் பிரதம நீதிஅரசர் சரத் என் சில்வாவிற்கு உயர் நீதிமன்றத்தால் குறித்த அழைப்பாணை  விடுக்கப்பட்டுள்ளது.  

நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டில் முன்னாள்  பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவிற்கு  பெப்ரவரி மாதம் 07 ஆம் திகதி  உயர் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்  3 ஆம்  திகதி மருதானையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட உரையாற்றிய முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா நீதிமன்றத்தை அவமதித்து கருத்து வெளியிட்டதாகவும் அதேபோன்று கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 18 ஆம் திகதியும்  நீதிமன்றத்தை அவமதித்து கருத்து வெளியிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவின் குறித்த கருத்து தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தி தண்டனை வழங்குமாறு மனுதாரர்கள் நீதிமன்றில் வழக்குத் தாக்குதல் செய்துள்ளனர்.

இந்நிலையிலேயே, நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவை பெப்ரவரி மாதம்  07ஆம்  நீதிமன்றில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு உயர் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. 

முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா, நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக குற்றம் சுமத்தி அவருக்கு எதிராக மூத்த பேராசிரியர் சந்திரகுப்த தேனுவர, பேராசிரியர் ஹேவா வாடுகே சிரில் மற்றும் மூத்த பேராசிரியர் பிரியந்த குணவர்தன ஆகியோர் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். 

நீதியரசர்களான விஜித் மலல்கொட, முர்து பெர்னாண்டோ மற்றும் எஸ். துரைராஜா ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் குறித்த வழக்கு  இன்று உயர் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 

எவ்வாறாயினும் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா இன்று நீதிமன்றில் ஆஜராகியிருந்ததுடன், குறித்த  வழக்கை விசாரிப்பதற்காக சட்டமா அதிபரின் ஒத்துழைப்பை பெறுவதாக நீதிபதிகள் குழாம் இன்று தெரிவித்தது. 

குறித்த வழக்கு அடுத்த மாதம்  07ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம் அன்றைய தினம் சரத் என் சில்வாவை நீதிமன்றில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-03-19 17:03:35
news-image

பொலிஸாருக்கு எதிராக இரு யுவதிகள் தாக்கல்...

2024-03-19 17:05:31
news-image

தேர்தலுக்கு பணம் திரட்டுவதற்காக அரசாங்கம் 2...

2024-03-19 16:45:00
news-image

நெடுங்கேணியில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

2024-03-19 16:49:55
news-image

கோப் குழுவிலிருந்து மரிக்கார் இராஜினாமா!

2024-03-19 16:40:26
news-image

யாழ். பல்கலை முன்றலில் போராட்டம்

2024-03-19 16:32:24
news-image

லிந்துலையில் வர்த்தக நிலையம் உடைத்து கொள்ளை

2024-03-19 16:18:54
news-image

கோப் குழுவிலிருந்து சரித ஹேரத் இராஜினாமா!

2024-03-19 15:59:04
news-image

“ குபுகட பச்சயன்” குற்றக் கும்பலை...

2024-03-19 16:00:44
news-image

கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

2024-03-19 16:00:14
news-image

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் முழுநாள் வேலைநிறுத்தம்!

2024-03-19 16:06:01
news-image

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழில்...

2024-03-19 15:38:30