இலங்கை தொடர்பான கோவைகளை அழித்துவிட்டதை ஒப்புக்கொள்கிறது பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சு

Published By: Vishnu

22 Jan, 2019 | 08:06 PM
image

தமிழர்களின் ஆயுதக்கிளர்ச்சியின் ஆரம்பக்கட்டங்களில் இலங்கை அரசாங்கத்துக்கு பிரிட்டன் செய்த உதவிகள் தொடர்பான சுமார் 400 கோவைகளை நிர்மூலஞ்செய்துவிட்டதை பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சு ஒத்துக்கொண்டதையடுத்து “வரலாற்றை நிர்மூலஞ்செய்தாக” அதன் மீது குற்றஞ்சாட்டப்படுகிறது.

தமிழ் விடுதலை போராட்ட இயக்கங்களுக்கு எதிராக அன்றைய இலங்கை அரசாங்கத்துக்கு பிரிட்டனின் தட்சர் அரசாங்கம் ஆயுதங்களை வழங்கியது. போராட்டத்தை ஒடுக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் பிரிட்டிஷ் அரசாங்கம் எந்தளவு தூரத்துக்கு உடந்தையாக இருந்தது என்பது என்றென்றைக்குமே முழுமைாகத் தெரியாமல் போகலாம் என்று தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்கள் கவலை வெளியிட்டிருக்கிறார்கள.

பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சு முன்னர் ஒத்துக்கொண்டதை விடவும் கிட்டத்தட்ட இரு மடங்கு கோவைகளை நிர்மூலஞ்செய்துவிட்டது என்று மோர்ணிங் ஸடார் பத்திரிகையினால் பெறப்பட்ட தகவல்கள் மூலம் தெரியவந்திருக்கிறது.

தமிழ் கெரில்லாக்களை எவ்வாறு அடக்குவதென்று இலங்கையின் புலனாய்வு சேவை அதிகாரிகளுக்கும் கமாண்டோக்களுக்கும் பிரிட்டனின் எம்.ஐ. 15 மற்றும் எஸ்.ஏ.எஸ் ஆகியவை ஆலோசனை வழங்கிய 1970 களின் பிற்பகுதியில் இருந்து 195 கோவைகள் நிர்மூலஞ்செய்யப்பட்டதாக அமைச்சு தெரிவித்திருந்தது. 1980 களின் முற்பகுதியில் இருந்து இன்னொரு 177 கோவைகளை இராஜதந்திரிகள் மோர்ணிங் ஸ்டார் இப்போது தகவல் வெளியிட்டுள்ளது.

எஞ்சியிருக்கும் கோவைகளில் பலவற்றில் சிறியரக ஆயுதங்கள் பற்றிய விபரங்கள் மாத்தீரமே இருக்கின்றன.

ஆயுத வர்த்தகத்துக்கு எதிரான இயக்கம்  கோவைகள் நிர்மூலம் செய்யப்பட்தை கடுமையாகக் கண்டனம் செய்ததுடன், ' இலங்கையின் போர்க்குற்றங்களில் அதற்கு இருக்கும் உடந்தையை வெளியுறவு அமைச்சு மறைத்துவிடுவதற்கு அனுமதிக்க்கூடாது என்று அந்த இயக்கம் கூறியிருக்கிறது.

அந்த இயக்கத்தின் பேச்சாளர் அன்று சிமித் கருத்துத் தெரிவிக்கையில்,

இலங்கையின் மோதலகள் பாரதூரமான விளைவுகளைக் கொண்டது. ஆயிரக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டார்கள். போரா் பிரிட்டனின் பாத்திரம் அரசாங்கத்துக்கு அசௌகரியமாக அமைந்துவிடக்கூடும். நீதியும் பொறுப்புக்கூறலும் இருக்கவேண்டுமானால் இது முற்றுமுழுதாக அம்பலப்படுத்தப்படவேண்டும் ' என்று கூறினார்.

1980 களில் பதவியில் இருந்த இலங்கையின் வலதுசாரி ஜனாதிபதியின் அரசாங்கத்துக்கு பிரிட்டன் ஆயுதங்களை வழங்கியதுடன் ஆயுதப்படைகளின் உயரதிகாரிகளுக்கு ஆலோசனையும் வழங்கியது. 

வரலாற்றுக் கோவைகளை சகல திணைக்களங்களுமே பேணவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 30 வருடங்களுக்குப் பிறகு தேசிய சுவடிகள் திணைக்களத்தில் அவற்றை பொதுமக்கள் பார்க்கக்கூடியதாகவும் இருக்கவேண்டும். ஆனால், அந்த கோவைகள் பகிரங்கப்படுத்தப்படுவதற்கு முன்னரோகவே வெளியுறவு அமைச்சு அழித்துவிடுகிறது.

கென்யாவில் காலனித்துவ எதிர்ப்பு இயக்கமான மோ மோவின் உறுப்பினர்கள் பிரிட்டனால் கொடுமைப்படுத்தப்பட்ட சம்பவங்கள் தொடர்பான கோவைகள் நிர்மூலஞ்செய்யப்பட்டதற்காக வெளியுறவு அமைச்சு உயர்மட்ட வரலாற்றியலாளர்களிடம் மன்னிப்புக் கேட்டு சில வாரங்கள் கடந்துபோவதற்கு முன்னதாகவே 2014 இல் இலங்கை தொடர்பான பதிவுகள் நிர்மூலஞ்செய்யப்பட்டன என்பதை மோர்ணிங் ஸ்டார் கண்டறிந்திருக்கிறது.

1980 களின் நடுப்பகுதி நிலைவரங்கள் தொடர்பான மேலும் 40 கோவைகளை நிர்முலஞ்செய்வதற்கு இராஜதந்திரிகள் இப்போது இரகசியத் திட்டங்களைத் தீட்டியிருப்பதாகவும் இந்த கோவைகளில் அரசியல் தஞ்ச விண்ணப்பங்கள், இலங்கைப் படைகளுக்கு பிரிட்டனில் அளிக்கப்பட்ட பயிற்சிகள் மற்றும்  ஒன்பது தொகுதி ஆயுதங்கள் விற்பனை ஆகியவை தொடர்பான விபரங்கள் அடங்கியிருக்கின்றன.

எஞ்சியிருக்கும் கோவைகளை அரசாங்கம் அழிக்காமல் பாதுகாப்பதற்கு முயற்சிகளை எடுத்துக்கொண்டிருக்கிறோம் எனறு கென்ற் பல்கலைக்கழகத்தில் இலங்கை விவகார நிபுணராக இருக்கும் கலாநிதி ராச்சேல் சியோய்கீ தெரிவித்தார். முதலில் நாமெல்லோரும் நினைத்தததை விடவும் மிகப்பெரிய அளவில் கோவைகள் நிர்மூலஞ்செய்யப்பட்டிருக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை மோதலில் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பாத்திரம் குறிப்பாக இலங்கைப்படைகளுக்கு ஆயுத உதவி மற்றும் பயிற்சி அளித்தது தொடர்பிலான பாத்திரம்  இன்னமும் முழுமையாக விளங்கிக்கொள்ளப்படவில்லை. அதன் காரணத்தினால்தான் கோவைகளை நிர்மூலஞ்செய்வதில் காட்டப்படுகின்ற ஆர்வம் தொடர்பில் சந்தேகம் எழுகிறது. தெரிந்தெடுத்து குறிப்பிட்ட கோவைகளை அழிப்பதன் மூலமாக வரலாற்றை திருப்பியெழுத எம்மால் அனுமதிக்கமுடியாது என்றும் அவர் கூறினார்.

பிரிட்டனில் உள்ள தமிழ் செயற்பாட்டாளர்களும் கோவைகள் நிர்மூலம் செய்யப்பட்டதை கடுமையாக கண்டனம் செய்திருக்கிறார்கள். லண்டனில் உள்ள தமிழ் தகவல் நிலையத்தின் நிறைவேற்றுச் செயலாளரான வைரமுத்து வரதகுமார் அவசர சட்ட ஆலோசனையைப் பெறுவதற்கு முயற்சிப்பதாக தெரியவருகிறது.

  தமிழ் ஒருமைப்பாட்டு சோசலிஸ்ட் குழு கோவைகள் நிர்மூலஞ்செய்யப்பட்டமை குறித்து பெரும் அதிர்ச்சியை வெளியிட்டிருக்கிறது.அதன் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் ரி.யூ.சேனன் பிரிட்டிஷ் அரசாங்கம் பல விடயங்களை மறைக்கமுயற்சிக்கிறது என்று குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

தமிழர்களுக்கும் சமத்துவத்துக்கும் சுயநிர்ணய உரிமைக்குமான அவர்களின் போராட்டத்துக்கும் எதிராக இலங்கை அரசாங்கங்கள் மேற்கொண்ட கொடூரமான ஆயுத ஒடுக்குமுறைக்கு மேற்கத்தைய வல்லரசுகள் ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கின என்று கூறியிருக்கும் சர்வதேச புகழ்பெற்ற பாடகி 'மியா '  மாதங்கி அந்த வல்லரசுகளின் ஆதரவும் ஒத்துழைப்பும் வரலாற்றை அழிப்பதிலும் திருப்பி எழுதுவதிலும் கூட தொடருகிறது என்று குற்றஞ்சாட்டினார்.

(லண்டன் மோர்ணிங்ஸ்டார்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58