உடல் தேவைக்­கேற்ப தண்ணீர் பரு­கு­வது அவ­சியம்.!

Published By: Robert

05 Apr, 2016 | 11:12 AM
image

கோடை காலம் வந்து விட்­டாலே வெயிலின் தாக்கம் அதி­க­ரித்து காற்றில் ஈரப்­பதம் குறைந்து சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்­படும். இதனால் உடல் ஆரோக்­கி­யத்தில் பல்­வேறு பிரச்­சி­னைகள் ஏற்­படும். நம் உட­லுக்குத் தேவை­யா­ன­தை­விட தண்­ணீரை அதி­க­மாகக் குடிப்­ப­தாலும், குறை­வாகக் குடிப்­ப­தாலும் ஏற்­ப­டக்­கூ­டிய பாதிப்­பு­களை விளக்கி, தேவை­யான ஆலோ­ச­னை­களை வழங்­கு­கிறார் உண­வியல் வல்­லுநர்.

பொது­வாக, உணவில் உள்ள ஊட்டச் சத்­துக்கள் அனைத்தும் இரத்­தத்தில் கலந்­து­விடும். சோடியம் போன்ற உப்­புச்­சத்துப் பொருட்­களை அதிகம் சாப்­பி­டு­வதால், அவை ரத்­தத்தில் கலந்து சில நேரங்­களில் ஏதா­வது ஓரி­டத்தில் ரத்த நாளங்­களில் படிந்­து­வி­டக்­கூடும்.நாள­டைவில் அவை இரத்­தத்­தி­லேயே தங்கி, இரத்­தக்­கொ­திப்பு போன்ற பிரச்சினை வரக்­கூடும். சாப்­பிட்­டதும் ஒரு டம்­ள­ருக்குக் குறை­யாமல் தண்ணீர் குடிப்­பதால், உட­ன­டி­யாக உப்பு மற்றும் இதர பொருட்கள் சிறுநீர் வழி­யாக வெளி­யே­றி­விடும்.

தினமும் சரி­யான அள­வுக்குத் தண்ணீர் குடிப்­பதால் உடலில் இருக்கும் நுண்­ணு­யிரி களும், கிரு­மி­களும் சிறுநீர் வழி­யாக வெளி­யேறி விடும். இதேபோல் காய்ச்சல், வாந்தி மற்றும் வயிற்­றுப்­போக்கு வரும் நேரங்­களில் அதி­க­மாகத் தண்ணீர் குடிப்­பதால் உடலில் உள்ள கிரு­மிகள் சிறுநீர் வழி­யாக வெளி­யே­றி­விடும்.

அதிக அளவு தண்ணீர் குடித்தால் என்ன?

காலை, மாலை, இரவு உறங்­கு­வ­தற்கு முன் என சிலர் ஒரே நேரத்தில் அதிக தண்­ணீரைக் குடிப்­பார்கள். குடிக்கும் நீரா­னது ரத்­தத்தில் கலந்து, உடலில் உள்ள அனைத்து உறுப்­பு­க­ளுக்கும் சென்று, இறு­தி­யாக சிறு­நீ­ர­கத்தால் வெளி­யேற்­றப்­படும். இப்­படி ஒரே நேரத்தில் அதிக அளவு நீரைக் குடிப்­பதால், உடலின் அனைத்து உறுப்­பு­க­ளுக்கும் அதிக அழுத்தம் கொடுக்­கப்­படும்.

சிறு­நீ­ர­கத்தில் சேக­ர­மாகும் தேவை­யற்ற கிரு­மி­க­ளையும், பொருட்­க­ளையும் சுத்­தி­க­ரிக்கும் பணியைச் செய்ய லட்­சக்­க­ணக்­கான நெஃப்­ரான்கள் உள்­ளன. தொடர்ந்து பல ஆண்­டு­க­ளாக அதிக தண்­ணீரைக் குடிக்­கும்­போது சிறு­நீ­ர­கத்­துக்கும், நெஃப்­ரான்­க­ளுக்கும் அதிக வேலைப்­பளு கொடுக்­கப்­படும். இதனால் நெஃப்­ரான்கள் செய­லி­ழந்து, சிறு­நீ­ரக மும் பாதிக்­கப்­ப­டு­கி­றது.

பேருந்து, வாகனப் பய­ணங்­களில் சிலர் அதி­க­மாக தண்ணீர் குடிப்­பார்கள். ஆனால், சிறுநீர் வெளி­யேற்ற முடி­யாமல் இருப்­பார்கள். இப்­படித் தொடர்ந்து பல மணி நேரம் சிறு­நீரை அடக்­கும்­போது, உடலில் இருந்து வெளி­யேற்­றப்­பட வேண்­டிய தேவை­யற்ற கழிவுப் பொருட்கள் பல மணி நேரம் சிறுநீர்ப் பையி­லேயே தங்­கி­யி­ருக்கும். இதனால் சிறுநீர் கழிக்­கும்­போது எரிச்சல், சிறு­நீ­ரோடு இரத்தம் வெளி­யே­று­வது போன்ற சிறுநீரகத் தொற்றுப் பிரச்சி­னைகள் ஏற்பட வாய்ப்­புள்­ளது.

குறைந்த அளவு தண்ணீர் குடித்தால் என்ன?

ஒரு மணி நேரத்­துக்கு ஒரு முறை 200 மில்லி லீட்டர் தண்ணீர் குடிக்கவில்­லை­யெனில், உடல் சோர்வு ஏற்­படும்.

ஆண்கள் ஒரு நாளில் 3.5 – 4 லீட்டர், பெண்கள் 2.5 –- 3 லீட்டர் தண்­ணீ­ருக்கும் குறை­யாமல் குடிக்க வேண்டும். நீரா­கத்தான் குடிக்க வேண் டும் என்­ப­தில்லை, மோர், இளநீர், பழ­ரசம் போன்ற வகை­யிலும் நீர்த்­தே­வையைப் பூர்த்தி செய்­யலாம். குளிர்­கா­லத்தில் இந்த அளவு கொஞ்சம் குறை­யலாம்.

சிறு­நீ­ரக பாதிப்பு உள்­ள­வர்கள், பரிந்­து­ரைக்­கப்­பட்ட அள­வை­விட குறைந்­த­ளவு தண்ணீர் குடிக்க வேண்டும். குளிர்­கா­லத்தில் தாகம் எடுக்­க­வில்லை என்றாலும், சூடான காபி, டீ பானங்கள் மூலம் உடலின் நீர்த்தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

தண்ணீர் குடித்தால் அடிக்கடி சிறுநீர் வரும் என்று நினைத்து தாகத்தை அடக்கினால், உடலின் நீர்ச்சத்து குறைவது தொடங்கி, சிறுநீரகப் பிரச்சினைகள் வரை . தொடரும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04