ஹெரோயின் மற்றும் என்சி போதை பொருளுடன் ஜேர்மன் நாட்டுப் பெண்கள் இருவரை ஹட்டன் பொலிஸார் நேற்று மாலை கைது செய்துள்ளனர்.

ஜேர்மன் நாட்டிலிருந்து நுவரெலியா பகுதிக்குச் சுற்றுலா சென்ற இரண்டு பெண்களும் வாடகைக்கு கார் ஒன்றினை பெற்று நுவரெலியாவிலிருந்து கொழும்பு நோக்கி புறப்பட்டு சென்ற வேளையில் ஹட்டன் மல்லியப்பு சந்தியில் வைத்துக் குறித்த காரை சோதனை செய்த போதே குறித்த இரண்டு பெண்களிடமிருந்து இந்த ஒரு தொகை போதைப் பொருள் மீட்கப்பட்டதாக ஹட்டன் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இரண்டு பெண்கள் மீது ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு இன்று செவ்வாய்க்கிழமை குறித்த இரண்டு பெண்களும் ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்