இராணுவ வசமிருந்த மேலுமொரு தொகுதி காணி மக்களிடம் கையளிப்பு

Published By: Digital Desk 4

22 Jan, 2019 | 02:35 PM
image

வவுனியா மாவட்டத்தில் இதுவரை காலமும் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்த அரச மற்றும் தனியார் காணிகளின் மேலுமொரு தொகுதி இராணுவத்தினால் மக்களிடம் மீண்டும் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த காணிகளை கையளிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் தலைமையில் இன்று (22) முற்பகல் வடக்கு ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.

வன்னி இராணுவ கட்டளை தலைமையகத்தினை பிரதிநிதித்துவம் செய்து 56ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரபாத் தெமட்டன்பிட்டிய காணிவிடுவிப்பிற்கான பத்திரத்தை ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனிடம் கையளித்தார்.  ஆளுநர் அதனை வவுனியா அரச அதிபர் ஐ.எம்.ஹனீபாவிடம் கையளித்தார்

இதனடிப்படையில் வன்னி இராணுவ கட்டளைத் தலைமையகத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில் 40.74 ஏக்கர் அரச காணிகளும் 13.64 ஏக்கர் தனியார் காணிகளும் விடுவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வந்த சுமார் 264 ஏக்கர் தனியார் காணிகளும், 

இராணுவத்தின் கீழ் இருந்த நான்கு பண்ணைகளுக்கு சொந்தமான 1099 ஏக்கர் அரச காணிகளையும் விடுவிப்பதற்கான சான்றுப் பத்திரங்கள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவால் முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இடம்பெற்ற தேசிய போதைத்தடுப்பு வாரத்தன் ஆரம்ப நிகழ்வில் வைத்து ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதுடன் அந்தக் காணிகள் வடக்கு ஆளுநர் ஊடாக மாவட்ட செயலாளர்களிடம் கையளிப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களின் துயரங்களிற்கு தீர்வை காண்பதற்கு நாட்டின்...

2024-03-28 14:20:44
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59