Huawei அறிமுகப்படுத்தும் Dewdrop display தொழில்நுட்பத்துடனான Y series 2019

Published By: R. Kalaichelvan

22 Jan, 2019 | 10:59 AM
image

உலகில் தொலைதொலைதொடர்பு உட்கட்டமைப்பு சார்ந்த மிகப் பாரிய உற்பத்தி நிறுவனமான HUAWEI,மிகவும் போற்றப்படுகின்ற தனது Y series உற்பத்தி வரிசையில் மற்றுமொரு உற்பத்தியை அண்மையில்அறிமுகப்படுத்தியுள்ளது.

கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் Huawei Y series 2019 உற்பத்தி வரிசை இலங்கையிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த உற்பத்தி வரிசையில் HUAWEI Y9 2019, HUAWEI Y7 Pro 2019 மற்றும் HUAWEI Y6 Pro 2019 ஆகிய உற்பத்தி வடிவங்கள் அடங்கியுள்ளன. 

புதிய தலைமுறை Dew Drop Display தொழில்நுட்பம் நவீன போக்கிலான நிறங்கள் மற்றும் AI கேமரா ஆகியவற்றுடன் ஆடம்பரமான வடிவமைப்பு ஆகிய தனித்துவமான சிறப்பம்சங்களை நிறுவனம் இதன் மூலமாக வெளிக்கொணர்ந்துள்ளது.

மங்கலான வெளிச்சங்களின் போதும் கூட வேகமாகவும் பாதுகாப்பாகவும் முக அடையாளத்தின் மூலமாக unlock செய்ய இடமளிக்கின்ற Face unlock தொழில்நுட்பத்தை இது கொண்டுள்ளது. 

முக அடையாள இனங்காணல் தொழில்நுட்பமானது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பிறர் திருட்டுத்தனமாக ஊடுருவல் செய்வதிலிருந்து உயர் மட்டப் பாதுகாப்பினை அளிக்கின்றது. 22 அடையாளங்கள் (labels) மற்றும் 500 இற்கும் மேற்பட்ட காட்சிகள் (scenes) ஆகியவற்றை நொடிப்பொழுதில் தானாகவே இனங்கண்டு கொள்ளும் AI scene recognition தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளதுடன் பரந்த துளையானது (Wide aperture) அனைத்து சாதனங்களையும் உச்சமயப்படுத்திரூபவ் அனைவரும் புகைப்படவியலில் கைதேர்ந்தவராக மாறுவதற்கு உதவுகின்றது. 

மேலும், Y9 2019 ஆனது விரல் அடையாள தொழில்நுட்பத்தின் அதிநவீன வடிவத்தைக் கொண்டுள்ளதுடன் மிகச் சிறந்த வகுப்பு விரல் அடையாள சென்சார் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. முகத்திரையை 0.3 செக்கன்களுக்கும் குறைவான கணப்பொழுதில் unlock செய்ய முடிவதுடன் Huawei Y Series இன் முன்னைய தலைமுறைகளுடன் ஒப்பிடுகையில் 40% வேகம் கூடியதாகவும் உள்ளது.

Huawei Device Sri Lanka நிறுவனத்தின் இலங்கைக்கான தலைமை அதிகாரியான பீட்டர் லியு அவர்கள் இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில்“நாம் இன்று கட்டுபடியாகும் உற்பத்தி வரிசையின் கீழ் புத்தாக்கத்தின் அடுத்த மட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். 

இப்புதிய அறிமுகமானது Dewdrop Fullview Display, Face unlock, AI scene recognition, Wide aperture, Super and large battery capacityஆகிய தொழில்நுட்ப சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளதையிட்டு நாம் மிகவும் பெருமை கொள்கின்றோம்” என்று குறிப்பிட்டார்.

Huawei Y9 2019 ஆனது இந்த உற்பத்தி வரிசையின் முதல்வனாகத் திகழ்வதுடன்ரூபவ் 6.5 அங்குல முகத்திரையைக் கொண்டுள்ளது. இந்த உற்பத்தி வரிசையைப் பொறுத்தவரையில் மிகப் பாரிய full view முகத்திரையாக இது அமைந்துள்ளது.

FHD+ (2340*1080)  உயர் பிரிதிறன் (high resolution) மற்றும் விரும்பியவாறு வடிவமைப்புச் செய்யப்படக்கூடிய உச்சநிலை கட்டமைப்பைக் கொண்டுள்ளதுடன் சந்தையில் இந்த உற்பத்தி வரிசையில் போட்டி

நிறுவனங்களின் வேறு எந்தவொரு சாதனங்களிலும் இவ்வசதி கிடைக்கப்பெறாமை குறிப்பிடத்தக்கது. Midnight Black மற்றும் Sapphire Blue ஆகிய நவீன போக்கிலான நிறங்களில் இச்சாதனம் கிடைக்கப்பெறுகின்றது. 

இளமைத் துடிப்புடனான வடிவமைப்பானது உயர் ரக ceramic glass மூலப்பொருள் மற்றும் 3D ARC வடிவமைப்பு ஆகியவற்றினால் மேலும் மெருகேற்றப்பட்டுள்ளது. பின்புறத்தில் 13MP + 2MP மற்றும் முன்புறத்தில் 16MP + 2MP என முதன்முறையாக நான்கு இரட்டை AI  கேமரா (Quad Dual AI Camera) மற்றும் 4000mAh பற்றரி ஆகியவற்றுடன் பாவனையாளர்களுக்கு புகைப்படவியல் ஆற்றலுக்கு உண்மையில் தீனி போடுகின்றது.

 F/1.8 கொண்ட மிகச் சிறிய துளை (Smallest Aperture), இந்த உற்பத்தி வரிசையில் மிகவும் மங்கலான வெளிச்ச நிலைமைகளிலும் சிறந்த புகைப்படம், AR புகைப்படவியல் ஆகிய தொழில்நுட்ப சிறப்பம்சங்களையும் இது கொண்டுள்ளது.AI Power Management, GPU Turbo, Game Assistant 2.0, Fingerprint 4.0 Version மற்றும் Face Unlock ஆகிய தொழில்நுட்ப அனுகூலங்களினால் இச்சாதனத்தின் செயல்திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது. 

Huawei Y7 Pro 2019 ஆனது இந்த உற்பத்தி வரிசையில் அடுத்ததாக தொழில்நுட்ப தனித்துவ சிறப்பம்சங்கள் நிரம்பியதாக காணப்படுவதுடன் முதன்முறையாக Dewdrop Display தொழில்நுட்பம் மற்றும் 4000mAh பற்றரி 6.26 அங்குல Dewdrop Fullview முகத்திரை மற்றும் HD+ (1520*720)உடனான சிறப்பான பிரிதிறன் ஆகிய சிறப்பம்சங்களுடன் இதே வகையான ஏனைய உற்பத்திகள் மத்தியில் ஈடுஇணையற்றதாக தன்னை நிரூபித்துள்ளது. 

Aurora Blue, Coral Red மற்றும் Midnight Black ஆகிய நிறங்களில் இது இலங்கையில் கிடைக்கப்பெறுகின்றது. இச்சாதனத்தின் 3 AI கேமரா,13MP + 2MP பின்புற கேமரா மற்றும் முன்புறத்தில் 16MP AI கேமரா ஆகியவற்றின் பக்கபலத்தைக் கொண்டுள்ளதுடன் Self-toning flash 2.0, மற்றும் AR புகைப்படவியலுடனான Self-toning flash ஆகிய தொழில்நுட்ப இணைப்புக்களையும் கொண்டுள்ளது. 4000mAh battery, AI Power Management, Face Unlock, EMUI 8.2 மற்றும் Hand Gesture Controlஆகிய தொழில்நுட்ப பக்கபலத்துடன் இச்சாதனத்தின் செயல்திறன் மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது.

Huawei Y6 Pro 2019 ஆனது Leather finishing வடிவமைப்பு மற்றும் முதன்முறையாக Dewdrop முகத்திரையுடன் இது வெளிவந்துள்ளது. 6.09 அங்குல Dewdrop FullView முகத்திரை, HD+ (1520*720) உடனான சிறப்பான பிரிதிறன் ஆகியன இதே வகை ஸ்மார்ட்போன் ஆர்வலர்களுக்கு காதில் தேன் பாயும் செய்தியாக அமைந்துள்ளது. 

Y6 Pro இனது Amber Brown மற்றும் Midnight Black நிறங்களில் கிடைக்கப்பெறுவதுடன், சந்தையில் கிடைக்கும் இத்தகைய வடிவமைப்புக்கள் மத்தியில் தனது தனித்துவத்தை நிலைநாட்டியுள்ளது. வளைந்த வடிவமைப்பு texture leather finishing வேலைப்பாடு இதன் இளமைத்துடிப்பு மற்றும் தனித்துவமான வடிவமைப்பினை மேலும் மெருகேற்றியுள்ளது. 

Low light face unlock, Huawei Super Sound மற்றும் AI Power Management உடனான3000mAh battery போன்ற தொழில்நுட்ப சிறப்பம்சங்களுடன் EMUI 9.0 மற்றும் Android 9 Pie ஆகியவற்றின் பக்கபலத்தால் இச்சாதனத்தின் செயல்திறன் மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. Lowlight photography அதன் உயர் ரக leather இனை ஒத்த finish design முடிவு வேலைப்பாடு ஆகியவற்றிற்காக Y6 Pro ஆனது பல்வேறு சர்வதேச இனங்காணல் அங்கீகாரங்களையும் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

HUAWEI Y series 2019 உற்பத்தி வரிசை சாதனங்கள் ஒரு வருட பாவனைக் கால உத்தரவாதத்துடன் கிடைக்கப்பெறுவதுடன் அனைத்து HUAWEI அனுபவ மையங்களிலும் பெற்றுக்கொள்ள முடியும். 

ஸ்மார்ட்போன்களை சந்தைப்படுத்துவதில் இலங்கையில் முன்னணி வகித்து வருகின்ற சிங்கர் ஸ்ரீலங்கா நிறுவனம் Y series 2019 சாதனங்கள் இலங்கை எங்கிலும் கிடைக்கப்பெறுவதை உறுதிப்படுத்துகின்றது. தெரிவு செய்யப்பட்ட டயலொக் மற்றும் மொபிடெல் காட்சியறைகளிலும் இதனைப் பெற்றுக்கொள்ள முடியும்.

IDC கடந்த வாரம் வெளியிட்டுள்ள புள்ளி விபரங்களுக்கு அமைவாக உலகில் ஸ்மார்ட்போன் விற்பனையில் HUAWEI தனது போட்டியாளரை பின்தள்ளி முதலாவது ஸ்தானத்தை அண்மையில் தனதாக்கியுள்ளது. GfK அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம் இலங்கையில் ஸ்மார்ட்போன் விற்பனையில் HUAWEI முதலாவது ஸ்தானத்தை தனதாக்கியுள்ளது. 

2018 ஆம் ஆண்டில் BrandZ இன் முதல் 100 இடங்களில் திகழும் மிகவும் பெறுமதிவாய்ந்த சர்வதேச வர்த்தகநாமங்கள் பட்டியலில் இந்த வர்த்தகநாமம் 48 ஆவது இடத்தைப் பிடித்துள்ளதுடன் Forbes  வெளியிட்டுள்ள உலகின் மிகவும் பெறுமதிவாய்ந்த வர்த்தகநாமங்கள் பட்டியலில் 79 ஆவது ஸ்தானத்தைப் பிடித்துள்ளது. 

Brand Finance வெளியிட்டுள்ள உலகின் மிகவும் பெறுமதிவாய்ந்த 500 வர்த்தகநாமங்களின் பட்டியலில் 25 ஆவது ஸ்தானத்தையும் பிடித்துள்ளது. 2018 ஆம் ஆண்டிற்கான Interbrand மிகச் சிறந்த சர்வதேச வர்த்தகநாமங்கள் பட்டியலில் இது 68 ஆவது இடத்தைப் பிடித்துள்ளதுடன் Fortune  500 தரப்படுத்தல் பட்டியலில் 83 ஆவது ஸ்தானத்தைப் பிடித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58