இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற நாய்கள் கொல்லப்படுவது ஏன் தெரியுமா ?

Published By: Daya

22 Jan, 2019 | 03:02 PM
image

இந்தியாவின் பொலிஸ் பிரிவில் மட்டுமின்றி, இராணுவ படைகளிலும் கூட நாய்கள் இடம் பெற்றுள்ளன. இராணுவ வீரர்கள் போல, இராணுவ நாய்களுக்கும் பணி காலம் மற்றும் ஓய்வு பெறுவதற்கான காலம் இருக்கிறது. இராணுவத்தில் பணியாற்றிய வீரர்களுக்கு அவரவர் படிப்பு மற்றும் ஓய்வு பெறும் காலத்தில் அவர் வகித்த பதவி சார்ந்த வேறு அரசு வேலைகள் தரப்படும்.

ஆனால், இராணுவத்தில் நாட்டுக்காக பணியாற்றிய நாய்களுக்கு என்ன நிலை ஏற்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா?ஆர்.டி.ஐ’யில் இருந்து கிடைக்கப்பட்டதாக கூறப்படும் பதிலில், ஓய்வு பெறும் இராணுவ நாய்கள் வலியற்ற முறையில் கொலை செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஓய்வு பெறும் இராணுவ நாய்களை ஏன் கொல்கிறார்கள்? ஓய்வு பெறும் நாய்களை மட்டும் தான் கொல்கிறார்களா? இதற்கான காரணங்கள் என்ன?

இராணுவ நாய்கள் மட்டுமல்ல, குதிரைகளும் கூட உடற்தேர்வு குறைப்பாடு அல்லது நோய்வாய்ப்பட்டு போகும் போது, ஓய்வுபெறும் காலத்தை எட்டும் போது கொலை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.Euthanasia என்று கூறப்படும் மனிதர்களால் வலியின்றி பிராணிகள் கொலை செய்யப்படும் முறையில் இராணுவ நாய்கள் மற்றும் குதிரைகள் கொலை செய்யப்படுகின்றன.

இது குறித்து இராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்ததாவது,

“ஒவ்வொரு இராணுவ நாயும் ஏதோ ஒரு சிறப்பு பிரிவில் பயிற்சி பெறுகின்றன. வெடிக்குண்டு கண்டிபிடித்தல், பாதுகாத்தல், விபத்து, காயம் பட்டவரை கண்டறிதல், காலாட்படை ரோந்து, கண்காணிப்பு என பல திறன் வேலைகளில் இராணுவ நாய்கள் பணிபுரிகின்றன.

இராணுவ நிபந்தனைகளின் படி தெரியாதவர்கள், தவறானவர்களின் கைகளில் இராணுவ நாய்கள் நோய் வாய்ப்பட்டோ, திறன் இழந்தோ, ஓய்வுபெற்ற பிறகோ சிக்கினால் அதனால் ஏதேனும் தவறுகள் ஏற்படலாம். அதனால் தேசத்திற்கு அபாயங்கள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன.

இதனால் தான் இராணுவ நாய்கள் சில காரணங்களால் இராணுவ பணியில் இருந்து விலகும் நிலை ஏற்படும் போது நிரந்தரமான, நிம்மதியான உறக்கமளிக்கப்பட்டு பிரியாவிடை பெறுகிறது என்று கூறுகிறார்கள். பொதுவாக இராணுவ பிரிவில் லேப்ரடர்ஸ் (Labradors), ஜெர்மன் ஷெப்பர்ட் (German shepherds), பெல்ஜியன் ஷெப்பர்ட் (Belgian shepherds) போன்ற வகைகளை சேர்ந்த நாய்கள் தான் பயன்படுத்தப்படுகின்றன.

 அவற்றின் குணாதிசயம், காலநிலைக்கு ஏற்ப மாற்றங்கள் மற்றும் அவற்றின் இயற்கை பண்புகள், பழகும் விதம் கொண்டு தான் இராணுவத்திற்கு தெரிவு செய்கிறார்கள்.பெரும்பாலும் குண்டுகள் கண்டுபிடிக்க, ரோந்து போன்ற வற்றுக்கு தான் இராணுவ நாய்கள் பயன்படுத்த படுகின்றன. இதனால் அவைகள் சோர்வடையவும், ஆரோக்கியம் குறைந்து போகவும் வாய்ப்புகள் உள்ளன.

ஆனால், அவற்றுக்கான பயிற்சிகள் நிச்சயம் தொடர்ந்து அளிக்கப்படும். ஒருவேளை காயங்கள் ஏற்பட்டோ, நோய் உண்டாகியோ, வயது மூப்பினாலோ அவற்றால் தொடர்ந்து இராணவத்தில் பணிபுரிய முடியாது என்ற நிலை ஏற்படும் போது வலியற்ற முறையில் கொலை செய்யப்படுகின்றன.

ஏன் பாதுகாப்பானவர்கள் கைகளில் ஓய்வுபெறும் நாய்களை ஒப்படைக்க கூடாது என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். ஆனால், அவை வளர்ந்த விதம், அவை பெற்ற பயிற்சி போன்றவை மிகவும் இரகசியமானவை.அவற்றை பொதுமக்கள் கைகளில் அவ்வளவு எளிதாக கொடுத்துவிட முடியாது. எனவே, தான் வேறு வழியே இல்லாமல் அவை கொலை செய்யப்படுகின்றன என்று இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இராணுவம் அல்லது இராணுவத்தினர் ஒன்றும் கடவுள் இல்லை. அவர்கள் எப்படி ஒரு உயிரை பறிக்கலாம் என்று சிலர் விலங்குகள் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். ஓய்வுபெறும் நாய்களுக்கு உண்ண உணவும், தங்க இடம் மட்டும்தானே தேவை. அதற்கான நிதியை இராணுவம் நிச்சயம் ஒதுக்கலாம். அவற்றை சாகும் வரை பாதுகாக்கலாம் என்றும் தெரிவிக்கின்றனர். 

விலங்குகள் பாதுகாப்பு அமைப்பான பீட்டாவை சேர்ந்த ஒருவர், விலங்குகளை ஏதோ சும்மா கொன்றுவிட முடியாது. தங்க வைக்க இடமில்லை, பாதுகாக்க முடியாது, பயனில்லை என்றெல்லாம் கூறி கொலை செய்வது தவறு.ஆனால், வேறு வழியின்றி இராணுவத்தில் நாய்கள் வலியற்ற முறையில் இறக்கும் நிலை தொடர்ந்து வருகிறது என்று தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

வெளியில் இருந்து பார்க்கும் நமக்கே நாய்கள் கொல்லப்படுவது சோகத்தை ஏற்படுத்தும். ஆனால், அதை தன்னுடனே வளர்த்து, பயிற்சி அளிக்கும் நபர்களால் அவ்வளவு எளிதாக கொலை செய்துவிட முடியாது. வீட்டில் வளர்க்கப்படும் நாய்களை பிரிந்தாலே கண்கலங்கும் ஆட்கள் இருக்கிறார்கள்.

இது நாட்டிற்காக வளர்க்கப்படும் நாய்கள். இவற்றுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள். அவை தனது வேலையின் போது கண்டறிந்த, அனுபவம் பெற்ற விஷயங்கள் யாவும் மிகவும் இரகசியமானவை.

ஒருவேளை தவறானவர்கள் கைகளுக்கு சென்றால் நிச்சயம் அது அபாயமான காரியங்களுக்கு பயன்படுத்தப்படலாம். ஆகவே தான் இராணுவ நாய்கள் கொலை செய்யப்படுகின்றன.

கொலை செய்யப்படும் நாய்களை மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகின்றன என தெரிவித்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிரம்பிற்கு எதிரான வழக்கு – நீதிமன்றத்திற்கு...

2024-04-20 08:19:02
news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17