யாழில் வீடுபுகுந்து கொள்ளை,சிறுமியின் மீது பாலியல் வன்முறை

Published By: R. Kalaichelvan

22 Jan, 2019 | 10:53 AM
image

யாழ். வலி வடக்கில் வீட்டின் கூரையை பிரித்து உட்புகுந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த பணத்தினை கொள்ளையிட்டதுடன் , வீட்டில் இருந்த பதின்ம வயது சிறுமி ஒருவரையும் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி தப்பி சென்றுள்ளனர். 

வலி.வடக்கில் இச் சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்று உள்ளது. 

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, 

வலி.வடக்கு பகுதியில் மூவரடங்கிய கொள்ளை கும்பல் ஒன்று இரு வீடுகளில் கொள்ளையிட்டுள்ளனர். 

அதன் போது ஒரு வீட்டில் பாதிக்கப்பட்ட சிறுமி , அவரது பெரியம்மா மற்றுமொரு உறவினரான பெண்ணொருவர் என மூவார இருந்துள்ளனர். அந்த வீட்டினுள் கூரையை பிரித்து உட்புகுந்த மூன்று கொள்ளையர்களும் வீட்டினுள் இருந்த மூன்று பெண்களையும் கட்டி வைத்து விட்டு,  சல்லடை போட்டு தேடுதல் நடத்தி வீட்டில் இருந்த 27 ஆயிரம் ரூபாய் பணத்திணை கொள்ளையிட்டுள்ளனர். 

பின்னர் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதனை அடுத்து சிறுமியை மீட்ட பொலிஸார், சிறுமியை யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். 

அத்துடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47