Earth Watchmen திட்டம் ஜனாதிபதி தலைமையில் கிளிநொச்சியில் ஆரம்பம்

Published By: Digital Desk 4

21 Jan, 2019 | 09:47 PM
image

2019 ஆம் ஆண்டு கிரிக்கட் உலகக் கிண்ணத்துடன் இணைந்ததாக நாடளாவிய ரீதியில் 2 மில்லியன் மரக்கன்றுகளை நடும் "Earth Watchmen" திட்டம் ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று (21) முற்பகல் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி விவசாய பீட வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கிரிக்கட் மட்டைகளை தயாரிப்பதற்காக வருடாந்தம் வெட்டப்படும் மரங்களுக்கு பதிலாகவும் விளையாட்டு வீரர்கள் மற்றும் இரசிகர்கள் மத்தியில் மர நடுகை தொடர்பான பொறுப்பை எடுத்துக்காட்டும் வகையிலும் தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தினதும் சம்பத் வங்கியினதும் அனுசரணையில் இந்த செயற்திட்டம் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இந்த மர நடுகை செயற்திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் வகையில் ஜனாதிபதி முதலாவது மரக்கன்றை நாட்டியதுடன், அதனைத் தொடர்ந்து பாடசாலை சிறுவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களின் பங்குபற்றுதலில் 1500 மரக்கன்றுகள் ஒரே தடவையில் நடப்பட்டன.

கிளிநொச்சி நகரை மையப்படுத்தி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மரம் நடுகை செயற்திட்டத்துடன் வடக்கையும் தெற்கையும் இணைத்து நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்வில் பங்குபற்றிய ஜனாதிபதிக்கு விசேட நினைவுச் சின்னமொன்றும் வழங்கி வைக்கப்பட்டது.

அமைச்சர்களான தயா கமகே, ரிஷாத் பதியுதீன், வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேக்கர, பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன், “Earth Watchmen” திட்டத்தின் பணிப்பாளர் நலின் ஆட்டிகல, சம்பத் வங்கியின் சிரேஷ்ட மேலதிக பொது முகாமையாளர் தாரக ரன்வல தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் சாரங்க விஜேரத்ன, யாழ் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ஆர்.விக்னேஸ்வரன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:31:22
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49