முல்லைத்தீவு விபத்து ; ஊடகவியலாளர்களுக்கு இராணுவம் அனுமதி மறுப்பு

Published By: Vishnu

21 Jan, 2019 | 04:29 PM
image

முல்லைத்தீவு - புளியங்குளம் வீதியில் கோடாலிகல்லு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் செய்தி சேகரிக்கச்சென்ற ஊடகவியலாளர்களுக்கு இராணுவத்தினர் அனுமதி மறுத்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முல்லைத்தீவில் இடம்பெற்ற போதைப்பொருள் தொடர்பான நிகழ்வு மற்றும் பொதுமக்களின் காணி விடுவிப்பு தொடர்பில் கலந்துகொள்ள சென்றிருந்தார்.

ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக சென்ற இராணுவ கொமாண்டோ படையணியே பாதுகாப்பு பணியை நிறைவு செய்துவிட்டு வவுனியா பகுதி நோக்கி வருகைதந்தவேளை இவ் விபத்தில் சிக்கியுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள வளைவில் வேகக்கட்டுப்பாட்டை இழந்தே விபத்துக்காகியுள்ளதுடன் படுகாயமடைந்தவர்கள் உடனடியாக நோயாளர் காவு வண்டிகளில் வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த விபத்தில் இராணுவ மேஜர் ஒருவரும் கோப்ரல் ஒருவரும் உயிரிழந்துள்ள நிலையில், நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் விபத்து இடம்பெற்ற பகுதியில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதுடன் செய்தி சேகரிப்புக்காகச் சென்ற தமக்கு இராணுவத்தினர் அனுமதி தராதுள்ளது நாட்டில் ஊடக சுதந்திரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டள்ளதாக செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19