மத்திய வங்கி என்ற பெயரில் போலி செய்தி ; மக்கள் அவதானம்!

Published By: Vishnu

20 Jan, 2019 | 01:22 PM
image

இலங்கை மத்திய வங்கியின் பெயரில் போலியான வகையில் குறுந்தகவல் செய்திகள் பரிமாறப்படுவதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இலங்கையில் இருக்கும் நிதி நிறுவனங்களை பிரதானமாகக் குறிவைத்து ஆரம்பிக்கப்பட்டிருக்கும் இந்த திருட்டு முயற்சி பற்றி இலங்கை மத்திய வங்கிக்கு அறியக்கிடைத்துள்ளதாகவும் வங்கி அறிவித்துள்ளது.

திருட்டு மின்னஞ்சல் முயற்சியானது இலங்கை மத்திய வங்கியின் ஊழியர் சேமலாப நிதியத் திணைக்களத்திலிருந்து கிடைக்கப்பெறுவது போலும் இலங்கை மத்திய வங்கியின் ஊழியர் சேமலாப நிதியத்தின் அறிவிப்பு (Notice From Central Bank of Sri Lanka EPF) எனும் தலைப்புடனும் பரிமாற்றப்படுவதாகவும் மத்திய வங்கி சுட்டிக்கட்டியுள்ளது.

மின்னஞ்சல் உள்ளடக்கமானது தீங்கிழைக்கும் இணையத் தளங்களுடன் இணைக்கப்படுவதுடன் தீங்கிழைக்கும் மென்பொருளை தரவிறக்கம் செய்யுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந் நிலையில் இலங்கை மத்திய வங்கியினது ஊழியர் சேமலாப நிதியத்திலிருந்து அவ்வாறான மின்னஞ்சல்கள் எதுவும் அனுப்பப்படவில்லையென இலங்கை மத்திய வங்கி பொது மக்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

பொது மக்கள் மற்றும் நிறுவனங்கள் நடைபெறுகின்ற திருட்டு முயற்சி பற்றி அவதானமாக இருக்குமாறும் இலங்கை மத்திய வங்கியின் ஊழியர் சேமலாப நிதியத்தின் அறிவிப்பு (Notice From Central Bank of Sri Lanka EPF) எனும் தலைப்பிலான சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்களை திறப்பதனையும் அல்லது அதனுள் காணப்படுகின்ற இணைப்புக்களைக்(Attachments) திறப்பதனையும் அல்லது அதில் காணப்படுகின்ற தொடர்புகளை(Links) அழுத்துவதனையும் தவிர்க்குமாறும் மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58