சிலியில் 6.7 ரிக்டெர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தென்அமெரிக்க நாடான சிலியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தினால் கோகியும்போ கடற்கரை பகுதியிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில், 53 கிலோ மீட்டர் ஆழத்திலேயே இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

எனினும் இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேத விபரங்கள் எதுவும் இது வரை வெளியாகவில்லை.