அசௌகரியங்களுக்குள்ளாகும் சிவனடிபாத மலைக்குச் செல்லும் யாத்திரீகர்கள்

Published By: Daya

18 Jan, 2019 | 03:27 PM
image

நல்லதண்ணி சிவனடிபாத மலைக்கு செல்லும் வீதியில் அமைந்துள்ள உணவகங்கள் சிலவற்றில் உணவு வகைகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதால் தாம் பெரும் அசௌகரியத்திற்கு உள்ளாவதாக யாத்திரீகர்கள் தெரிவித்தனர்.

இந்த வீதியில் அமைக்கப்பட்டுள்ள உணவக உரிமையாளர்கள், சிவனடிபாத மலைக்கு செல்லும் யாத்திரிகர்களிடமிருந்து அதிகளவு கட்டணங்களை அறவிடுவதாகவும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் கவனம் செலுத்த வேண்டும் எனவும், எதிர்வரும் காலங்களில் அதிகளவு யாத்திரிகர்கள் இம் மலையை தரிசிக்க வர உள்ளதால், விலைக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வேண்டுகோள் விடுக்கின்றனர்.

இவ்வாறு சிவனடிபாத மலைக்கு செல்லும் வீதியில் அமைக்கப்பட்டுள்ள உணவகங்களில் விலைப்பட்டியல் இடம்பெறாததால் அங்கு யாத்திரிகர்கள் உணவு உண்டப்பின் உணவக உரிமையாளர்களால் அதிகளவு கட்டணம் அறவிடப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

அத்தோடு சில உணவக உரிமையாளர்கள் தங்களது உணவகங்களில் உள்ள குடிநீர் போத்தல்களை விற்பனை செய்வதாக குழாய்  மூலம் வழங்கப்படும் குடி நீர் குழாய்கள் உடைத்து வீசப்பட்டுள்ளதாகவும் யாத்திரிகர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இவ்வீதியில் அமைக்கப்பட்ட கழிவறைகளின் கட்டணங்களும் நேரத்துக்கு நேரம் அதிகளவு பணத்தை அறவிடுவதாக புகார் தெரிவிக்கின்றனர். 

இச்சம்பவங்கள் பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் கவனத்திற்கு கொண்டுவந்து யாத்திரிகர்களின் எதிர்கால நலன்கருதி எதிர்காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க கவனம் செலுத்துமாறு வேண்டுகோள் விடுக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11