ஜனாதிபதியின் பிலிப்பைன்ஸ் விஜயம் குறித்து புதிய சர்ச்சை

Published By: Rajeeban

18 Jan, 2019 | 04:00 PM
image

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாரம் பிலிப்பைன்ஸுக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது அவருடன் சென்றவர்களில் வெளியுறவு அமைச்சர் திலக் மாரப்பன மாத்திரமே அமைச்சரவையைச் சேர்ந்தவர். எம்.பி.மார் எல்லோரும் எதிரணியைச் சேர்ந்தவர்களே.

ஜனாதிபதியின் இந்த விஜயத்தின்போது பிலிப்பைன்ஸுக்கும் இலங்கைக்கும் இடையில் ஐந்து புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன. அவற்றில் இலங்கையின் தரப்பல் மாரப்பன கைச்சாத்திட்டார்.

டிலான் பெரேரா, நிஷாந்த முத்துஹெட்டிகம, லசந்த அழகியவண்ண, துஷ்மந்த மித்திரபால, அங்கஜன் இராமநாதன், சிறியாணி விஜேவிக்ரம உட்பட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியைச் சேர்ந்த பல எம்.பி.மார் ஜனாதிபதியின் தலைமையிலான தூதுக்குழுவில் அங்கம் வகித்தனர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தையில் ஜனாதிபதியுடன் சுதந்திர கட்சி எம்.பி.மார்  கலந்துகொண்டனர். அவர்களை இரு தரப்பு பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கவைத்தது பொருத்தமற்ற விடயம்.

ஏனென்றால், அவர்கள் எந்தவொரு அதிகாரப் பதவியிலும் இல்லை. அரசாங்கத்தின் சார்பில் தீர்மானங்களை மேற்கொள்வதில் அவர்களால் எந்த அதிகாரத்தையும் செலுத்தமுடியாது என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை ஜனாதிபதியுடன் வந்திருப்பவர்கள் பெரும்பாலும் எதிரணி எம்.பி.மாரே என்பதை விளங்கிக்கொண்டவர்களாகவே பிலிப்பைன்ஸ் அரசாங்கத் தரப்பு தூதுக்குழுவினர் காணப்பட்டனர் என்றும் அந்த வட்டாரம் தெரிவித்தன.

இதேவேளை, பிலிப்பைன்சிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரை அழைத்து சென்று மக்களின் வரிப்பணத்தினை வீணடித்துள்ளார் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பல பாராளுமன்ற உறுப்பினர்களை பிலிப்பைன்ஸ் அழைத்துசென்றுள்ள சிறிசேன அரச தரப்பிலிருந்து வெளிவிவகார அமைச்சர் திலக்மாரப்பனவை மாத்திரம் அழைத்து சென்றுள்ளார் என கொழும்பு டெலிகிராவ் சுட்டிக்காட்டியுள்ளது.

பிலிப்பைன்ஸ் அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசப்படும் விடயங்கள் குறித்து எந்த பதிலையும் வழங்க முடியாதவர்களாக காணப்பட்டனர் என மிக முக்கிய அரச பிரதிநிதியொருவர் தெரிவித்தார் என கொழும்பு டெலிகிராவ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதியின் சுற்றுப்பயணத்தினால் மிகப்பெருமளவு பணம் வீணடிக்கப்பட்டுள்ளது என அரச வட்டாரங்கள் தெரிவித்ததாக கொழும்பு டெலிகிராவ் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெரிய நீலாவணை இரட்டை படுகொலை :...

2024-03-28 21:36:38
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07