பிலிப்பைன்ஸிலுள்ள இலங்கையர்களின் நலன்பேணலுக்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் - ஜனாதிபதி

Published By: Daya

18 Jan, 2019 | 01:00 PM
image

பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான தனது பயணத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய இலங்கை - பிலிப்பைன்ஸ் நட்புறவின் மூலம் பிலிப்பைன்ஸில் வாழும் இலங்கையர்களின் பிரச்சினைகளை தீர்த்து அவர்களின் நலன்பேணல்களுக்குத் தேவையான மேலும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டியுடேர்ட் (Rodrigo Duterte) இன் விசேட அழைப்பின் பேரில் பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு அரசமுறை பயணமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் பிலிப்பைன்ஸில் வாழும் இலங்கையர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (17) பிற்பகல் மனிலா நகரில் இடம்பெற்றபோதே ஜனாதிபதி  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உயர் கல்விபெறும் மாணவர்கள், தொழில்வல்லுனர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டதுடன், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி ஜனாதிபதியிடம் எடுத்துக் கூறினர்.

உயர் கல்விபெறும் மாணவர்களின் பிரச்சினைகள், விசா பெற்றுக்கொள்வதில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் போன்ற விடயங்கள் இதன்போது முன்வைக்கப்பட்டன. இந்த அனைத்து பிரச்சினைகளையும் பிலிப்பைன்ஸுக்கான இலங்கை தூதுவரிடம் முன்வைக்குமாறு குறிப்பிட்ட ஜனாதிபதி, பிலிப்பைன்ஸ் அரசாங்கத்துடன் கலந்துரையாடி இந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மேற்கொள்ள முடியுமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக தெரிவித்தார்.

பொருளாதார அபிவிருத்தி மற்றும் பௌதீக வள அபிவிருத்தியின் மூலம் பிலிப்பைன்ஸ் அடைந்துள்ள முன்னேற்றங்களை பாராட்டிய ஜனாதிபதி, போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளுக்கு எதிராக பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியினதும் அரசாங்கத்தினதும் அர்ப்பணிப்பையும் பாராட்டினார்.

இன்று இலங்கைக்கு முக்கிய சவாலாக உள்ள போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்துவதற்கு தனது வழிகாட்டலின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் விரிவான நிகழ்ச்சித் திட்டங்கள் பற்றியும் ஜனாதிபதி, பிலிப்பைன்ஸில் உள்ள இலங்கையர்களுக்கு விளக்கிக் கூறினார்.

இந்த நிகழ்ச்சித் திட்டங்களை பலப்படுத்துவதற்கு இவ்வருடம் ஜனவரி மாதம் மூன்றாவது வாரத்திலிருந்து மற்றுமொரு முக்கிய நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

தனது பிலிப்பைன்ஸ் விஜயத்தில் இரண்டு நாடுகளுக்கிடையிலும் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ள இருதரப்பு உடன்பாடு பற்றியும் இலங்கையர்களுக்கு விளக்கிய ஜனாதிபதி, இந்த இணக்கப்பாட்டினை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58