கொழும்பு நுகர்வோர் விலைச்­சுட்டெண் குறி­காட்­டியின் படி 2016 பெப்­ர­வரி மாதத்தில் 2.7சத­வீ­த­மாக காணப்­பட்ட பண­வீக்கம் மார்ச் மாதத்தில் 2 சத­ வீ­த­மாக குறை­வ­டைந்­துள்­ள­தாக தொகைம­திப்பு மற்றும் புள்­ளி­வி­ப­ரத்­தி­ணைக்­களம் வெ ளியிட்­டுள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அதன் படி மார்ச் மாதத்தில் 181.7 ஆக பதி­வா­கி­யி­ருந்த விலைச்­சுட்டெண் 1.16சத­வீ­த­மாக குறை­வ­டைந்து 2.1 புள்­ளி­யாக பதி­வா­கி­யி­ருந்­தது. இது 2016 ஆம் ஆண்டின் பெப்­ர­வரி மாதத்தில் 183.8 புள்­ளி­க­ளாக பதி­வா­கி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்தக்­கது. இதில் 1.10 சதவீதம் உண­வுப்­பொ­ருட்­க­ளிலும் 0.06 சதவீதம் ஏனைய பொருட்­களின் வீழ்ச்­சி­யிலும் பங்­க­ளிப்பு செய்­துள்­ளது.

இதன் அடிப்­ப­டையில் உணவுப் பொருள்சார் உற்­பத்­தி­களில் 0.8 சத­வீ­த­மாக காணப்­பட்ட பண­வீக்கம் 1.4 சத­வீ­த­மாக அதி­க­ரித்­துள்­ளது.அத்­தோடு ஏனைய பொருட்­க­ளுக்­கான பண­வீக்கம் 4.6 சத­வீதத்தில் இருந்து 2.5 சத­வீ­த­மாக குறை­வ­டைந்­துள்­ளது.

நுகர்வோர் விலைச்­சுட்­டெண்­ணா­னது 21 நாட்களுக்கு ஒருதடவை கணக்கிடப்படுவதோடு ஒவ்வொரு மாதத்திலும் வேலை நாட்களை மையமாக கொண்டு கணக்கிட ப்படுகின்றது.