இரண்டாவது முறையாக மேற்கிந்தியத் தீவுகள் சம்பியன் (Highlights)

Published By: Raam

04 Apr, 2016 | 08:37 AM
image

உலகக் கிண்ண இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் வர­ லாற்றில் 2 தட­வைகள் சம்­பி­ய­னான முத­லா­வது நாடு என்ற பெரு­மையை மேற்­கிந்­தியத் தீவுகள் பெற்­றுக்­கொண்­டது. 

கொல்­கத்தா ஈடன் கார்டன் விளை­யாட்­ட­ரங்கில் மகளிர் இறுதிப் போட்­டியில் தொடர்ந்து நேற்று இரவு நடை­பெற்ற மிகவும் பர­ப­ரப்­பான இறுதிப் போட்­டியில் இங்­கி­லாந்தை 2 பந்­துகள் மீத­மி­ருக்க 4 விக்­கெட்­டுக்­களால் வெற்­றி­கொண்ட மேற்­கிந்­தியத் தீவுகள் இரு­ப­துக்கு 20 உலக சம்­பியன் பட்­டத்தை சுவீ­க­ரித்­தது.

156 ஓட்­டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்­பெ­டுத்­தா­டிய மேற்­கிந்­தியத் தீவுகள் அணி, மார்லன் சமு வெல்ஸ், கார்லோஸ் ப்ரத்வெய்ட் ஆகிய இரு­வரின் அதி­ர­டியின் உத­வி­யுடன் 19.4 ஓவர்­களில் 6 விக்­கெட்­டுக்­களை இழந்து 161 ஓட்­டங்­களைப் பெற்று சம்­பியன் பட்­டத்தை சூடிக்­கொண்­டது.

நேற்­றைய இறு­திப்­போட்­டியில் நாணய சுழற்­சியில் வெற்­றி­பெற்ற மேற்­கிந்­தியத் தீவுகள் அணி, முதலில் துடுப்­பெ­டுத்­தா­டும்­படி இங்­கி­லாந்தை அழைத்­தது. அதன்­படி முதலில் துடுப்­பெ­டுத்­தாட கள­மி­றங்­கிய இங்­கி­லாந்து அணி ஆரம்­பத்தில் தடு­மாற்­றத்தை எதிர்­கொண்டு, மத்­தியில் திற­மையை வெளிப்­ப­டுத்தி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்­கெட்­டுக்­களை இழந்து 155 ஓட்­டங்­களைப் பெற்­றது.

இங்­கி­லாந்து முதல் 5 ஓவர்கள் நிறைவில் 3 விக்­கெட்­டுக்­களை இழந்து 23 ஓட்­டங்­களை மாத்­திரம் பெற்று பெரும் தடு­மாற்­றத்தை எதிர்­நோக்­கி­யது.

நியூ­ஸி­லாந்­துக்கு எதி­ரான அரை இறுதிப் போட்டி ஆட்­ட­நா­யகன் ஜேசன் ரோய் இரண்­டா­வது பந்தில் ஓட்டம் பெறாமல் வெளி­யே­றினார். இரண்­டா­ வது ஓவரில் அலெக்ஸ் ஹேல்ஸ்

ஒரு ஓட்­டத்­துடன் ஆட்­ட­மி­ழந்தார். தொடர்ந்து 5ஆவது ஓவரில் அணித் தலைவர் மோர்கன் 5 ஓட்­டங்­க­ளுடன் நடை­யைக்­கட்­டினார்.

இந்த இக்­கட்­டான நிலையில் ஜோடி சேர்ந்த ஜோ ரூட்டும் ஜொஸ் பட்­லரும் நான்­கா­வது விக்­கெட்டில் 34 பந்­து­களில் 61 ஓட்­டங்­களைப் பகிர்ந்து இங்­கி­லாந்து அணிக்கு உயி­ரூட்டிக் கொண்­டி­ருந்­த­போது பட்லர் 36 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழந்தார்.

பென் ஸ்டோக்ஸ் வேக­மாக 13 ஓட்­டங்­களை எடுத்து ஆட்­ட­மி­ழக்க, துடுப்­பாட்­டத்தில் எதை­யா­வது சாதிப்பார் என எதிர்­பார்க்­கப்­பட்ட மொயின் அலி தான் எதிர்­கொண்ட இரண்­டா­வது பந்தில் ஓட்டம் எத­னையும் பெறாமல் வெளி­யே­றினார்.

9ஆம் இலக்க வீரர் டேவிட் வில்லி, துணிவே துணை என்­ப­தற்கு அமைய அதி­ர­டியில் இறங்கி 14 பந்­து­களில் 2 சிக்­ஸர்கள், ஒரு பவுண்­டரி அடங்­க­லாக 21 ஓட்­டங்­களைப் பெற்று ஆட்­ட­மி­ழந்தார்.

மேற்­கிந்­தியத் தீவுகள் பந்­து­வீச்சில் கார்லோஸ் ப்ரத்வெய்ட் 23 ஓட்­டங்­க­ளுக்கு 3 விக்­கெட்­டுக்­க­ளையும் ட்வேன் ப்ராவோ 37 ஓட்­டங்­க­ளுக்கு 3 விக்­கெட்­டுக்­க­ளையும் சமுவெல் பட்றி 16 ஓட்­டங்­க­ளுக்கு 2 விக்­கெட்­டுக்­க­ளையும் வீழ்த்­தினர்.

அதன்­பி­றகு வெற்றி இலக்கை நோக்கிக் கள­மி­றங்­கிய மேற்­கிந்­தியத் தீவுகள் அணி இங்­கி­லாந்தைப் போன்றே தனது இன்­னிங்ஸின் ஆரம்­பத்தில் ஆட்டம் கண்­டது. ஜோன்சன் சார்ள்ஸ் (1), கிறிஸ் கெய்ல் (4), இந்­தி­யா­வுக்கு எதி­ரான அரை­யி­று­தியில் ஆட்­ட­நா­ய­க­னான லெண்ட்ல் சிமன்ஸ் (0) ஆகியோர் வீரர்­களின் ஆச­னத்­திற்கு திரும்­பி­யி­ருந்­த­போது மேற்­கிந்­தியத் தீவு­களின் மொத்த எண்­ணிக்கை வெறும் 11 ஓட்­டங்­க­ளாக இருந்­தது.

ஆனால் இலங்­கைக்கு எதி­ராக 2012 உலக இரு­ப­துக்கு 20 இறுதிப் போட்­டியில் ஆட்­ட­நா­ய­க­னான மார்லன் சமுவெல்ஸ் அப­ரா­மாக துடுப்­பெ­டுத்­தாட அவ­ருக்கு பக்­கத்­து­ணை­யாக தனது விக்­கெட்டை பாது­காத்­த­வாறு பிராவோ நிதா­னத்­துடன் துடுப்­பெ­டுத்­தா­டினார்.

இத­னி­டையே லியாம் ப்ளன்­கட்டின் பந்­து­வீச்சில் விக்கெட் காப்­பாளர் ஜொஸ் பட்­ல­ரிடம் பிடி­கொ­டுத்து மார்லன் சமுவெல்ஸ் ஆட்­ட­மி­ழந்­த­தாக மத்­தி­யஸ்தர் தீர்ப்பு வழங்­கினார். ஆனால் அந்தப் பிடியை பட்லர் முறை­யாக எடுக்­க­வில்லை என்­பது தொலைக்­காட்சி சலன அசைவில் தெரி­ய­வர மத்­தி­யஸ்தர் தனது தீர்ப்பை மாற்றி சமு­வெல்ஸை தொடர்ந்து துடுப்­பெ­டுத்­தாட அனு­ம­தித்தார். இவர்கள் இரு­வரும் நான்­கா­வது விக்­கெட்டில் 75 ஓட்­டங்­களைப் பகிர்ந்­தி­ருந்­த­போது பிராவோ 25 ஒட்­டங்­க­ளுக்கு ரூட்­டிடம் பிடி­கொ­டுத்து ஆட்­ட­மி­ழந்தார்.

அவரைத் தொடர்ந்து அண்­டரே ரசல், அணித் தலைவர் சமி 2 ஓட்­டங்­க­ளுடன் டேவிட் வில்­லியின் ஒரே ஓவரில் வெளி­யே­றினர்.

எனினும் மார்லன் சமு­வெல்­ஸுடன் ஜோடி சேர்ந்த கார்லோஸ் ப்ரத்வெய்ட் சிறப்­பாகத் துடுப்­பெ­டுத்­தாடி கடைசி ஓவரில் தேவைப்­பட்ட 19 ஓட்­டங்­களை தொடர்ச்­சி­யாக 4 சிக்­ஸர்கள் மூலம் பெற்று மேற்­கிந்­தியத் தீவு­களை இரு­ப­துக்கு 20 உலக சம்­பி­ய­னாக்­கினார்.

மார்லன் சமுவெல்ஸ் 66 பந்­து­களில் 2 சிக்­ஸர்கள், 9 பவுண்­ட­ரிகள் அடங்­க­லாக 85 ஓட்­டங்­க­ளு­டனும் கார்லோஸ் ப்ரத்வெய்ட் 10 பந்­து­களில் 4 தொடர்ச்­சி­யான சிக்­ஸர்கள் அடங்­க­லாக 34 ஓட்­டங்­க­ளு­டனும் ஆட்­ட­மி­ழக்­கா­தி­ருந்­தனர். அத்­துடன் இவர்கள் இரு­வரும் வீழ்த்­தப்­ப­டாத 7ஆவது விக்­கெட்டில் 54 ஓட்­டங்­களைப் பகிர்ந்­தனர்.

மேற்கிந்தியத் தீவுகளின் இந்த வெற்றியோடு இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தை இரண்டாவது முறை வெல்லும் முதல் அணி என்பதை மேற்கிந்தியத் தீவுகள் தனதாக்கிக்கொண்டது. அதேபோல இரண்டு முறை நாட்டுக்கு இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தைப் பெற்றுத்தந்த தலைவர் என்ற பெருமையையும் சமி பெற்றார்.

இறுதிப்போட்டியின் ஆட்ட நாயகனாக மேற்கிந்தியத் தீவுகளின் மார்லன் சமுவெல்ஸ் தெரிவுசெய்யப்பட்டார். அதேபோல் தொடர்நாயகனாக இந்தியாவின் விராட் கோஹ்லி தெரிவானார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35