வத்தளை துப்பாக்கி சூடு : நடந்ததென்ன ? பாதாள உலகக் குழுவினருக்கிடையிலான மோதலென சந்தேகம் 

Published By: Priyatharshan

14 Jan, 2019 | 09:42 PM
image

(ஆர்.விதுஷா)

வத்தளை ஹேகித்த - ஜயப்பன் சுவாமி  கோவிலுக்கு அண்மையில்  இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தின் பின்னணியில் பாதாள உலகக் குழுவினர் தொடர்பு பட்டிருக்கலாம்  என்ற  சந்தேகம் நிலவுவதாக பொலிசார்  தெரிவித்துள்ளனர் . 

இதேவேளை குறித்த சம்பவத்துடன், தொடர்புடைய சந்தேக நபர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை கைதுசெய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன்,  சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த   சி.சி.ரி.வி  ஆதாரத்தை மையமாகக்கொண்டும் 4 விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு  வேறுபட்ட கோணங்களில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் மேலும் குறிப்பிட்டனர். 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது , 

ஹேகித்த  - ஐயப்பன்  சுவாமி கோவிலுக்கு  அண்மையில்  நேற்று முன்தினம் ஞாயிற்றுக் கிழமை  பிற்பகல் 3 மணியளவில்  இடம்பெற்ற   துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் போது இருவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி   உயிரிழந்துள்ளனர்.

இதன் போது 31 வயதுடைய இல 158-07  ஜிந்துப்பிட்டி வீதி  , கொட்டாஞ்சேனை கொழும்பு-13 பகுதியை சேர்ந்த ஸ்டீவன் ராஜேந்திரன் எனப்படும் சாள்ஸ் எனப்படுபவரும்  38 வயதுடைய  இல 151-34 ஜிந்துப்பிட்டி பகுதியை சேர்ந்த சுப்பய்யா மதிவானன் எனப்படுபவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். 

இச் சம்பவத்தின்  போது  முகத்தை முழுமையாக மறைத்த வண்ணம் காரில் வந்த இனம் தெரியாத நபர்கள்   இருவர் ரி 56 ரக துப்பாக்கியால் சுமார் 24 தடவைகள்  சரமாரியாக துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

பாதாள உலக குழுவினருக்கு  இடையில் போதைப்பொருள் வியாபாரம் தொடர்பில்  நீண்டகாலமாக நிலவி வரும் முரண்பாட்டின் காரணமாகவே  இந்த துப்பாக்கி பிரயோகம்  மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்டவிசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது. 

இந்த நிலையிலேயெ "குடு செல்வி "என அழைக்கப்படுபவரின் மருமகள்  , மருமகளின் சகோதரன் , பிள்ளைகள் மற்றும்  அவருடைய நண்பன் ஆகியோர் பயணித்த காரிற்கே துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

இந்த இரு பாதாள உலக குழுவினருக்கும் இடையில் இடம்பெற்று வரும் முரண்பாடு காரணமாக இதுவரையில்  20 பேர் வரையில் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இதேவேளை , உயிரிழந்தவர்களின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக ராகமை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. 

மேலும், பாதாள உலகக்குழுவினர் இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புபட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிசார் சம்பவம் தொடர்பிலான மேலதிக  விசாரணைகளை   பல்வேறு கோணங்களில்  முன்னெடுத்த வருகின்றனர். இதற்காக   நான்கு  விசேட பொலிஸ் குழுவினர்  நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04