விலங்குகள் நலன்புரிச் சட்டம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் - சட்டத்தரணி யு.ஆர்.டி.சில்வா 

Published By: Digital Desk 4

14 Jan, 2019 | 03:32 PM
image

(இரோஷா வேலு) 

வனவிலங்குகள் மாத்திரமன்றி செல்லப்பிராணிகளையும் பாதுகாக்கும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுவரும் விலங்குகள் நலன்புரிச் சட்டம் விரைவில் பாராளுமன்றில் சமர்பிக்கப்படும் என சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி யு.ஆர்.டி.சில்வா தெரிவித்தார். 

நாட்டில் காணப்படும் விலங்குகள் பாதுகாப்பு சட்டங்கள் தொடர்பில் விலங்குகளை துன்புறுத்துவோருக்கு போதிய தெளிவு இல்லை என்பதே எமது கருத்தாகும். அதைவிட, அச் சட்டங்களின் பிரகாரம் குற்றவாளிகளாக அடையாளங்காணப்படுபவர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் அவ்வளவு கடினமாக காணப்படவில்லை என்பதினாலேயே தொடர்ச்சியாக விலங்குகள் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகின்றன. 

நாகரீக வளர்ச்சி கண்டுள்ள நாமோ விலங்குகளை சித்திரவதை செய்வதிலும் அவற்றை கொன்று குவிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றோம். மிருக வதையை காணொளி பதிவுசெய்து முகப்புத்தகத்தில் பதிவேற்றி இன்பமடைகின்றோம். 

இந்நிலைமையானது இனிவரும் காலங்களில் முற்றாக இல்லாதொழிக்க சட்டங்கள் கடுமையாக்கப்படுகின்றன. மனிதர்களுடன் விலங்குகளுக்கும் வாழ உரிமைகள் ஸ்தீரப்படுத்தப்படுகின்றது. இதற்காகவே விலங்குகள் நலன்புரி சட்டம் விரைவில் பாராளுமன்ற அங்கீகாரத்துக்காக பாராளுமன்றுக்கு வழங்கப்படவுள்ளது.

இந்த சட்டத்தை வரையும் பணிகளில் சட்டத்தரணிகள் சங்கம் முழு மூச்சாக இணைந்துள்ளது. இதற்காக மக்களிடமிருந்தும் கருத்துக்கள் பெறப்படுகின்றன. நீங்களும் உங்கள் கருத்துக்களை basl.lawnet@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டப்படுகின்றீர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

ஸ்ரீ போதிராஜா மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விலங்குகள் நலன்புரி சட்டம் தொடர்பான மக்கள் கருத்துக் கோரல் நிகழ்வு இன்று நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள நாமன்ன நிக்காயா தலைமையத்தில் இடம்பெற்றது. 

இங்கு இடம்பெற்ற மக்கள் கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி யு.ஆர்.டி.சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31