ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார்- கோத்தபாய

Published By: Rajeeban

14 Jan, 2019 | 10:02 AM
image

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தயார் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் ஜனாதிபதி தேர்தலொன்று இடம்பெறவேண்டும் என்பது எங்களிற்கு தெரியும் நீங்கள் தயார் என்றால் நான் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை ஏனைய உலக நாடுகளை போன்று முன்னோக்கி நகரவேண்டுமானால் இலங்கையர்கள் என்ற பொதுவான அடையாளத்தினை உருவாக்கவேண்டும்,இலங்கையின் பலரின் எதிர்பார்ப்பாக இது உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் மீண்டும் இலங்கையர்கள் என்ற எண்ணக்கருவை பலப்படுத்தவேண்டும் இந்த சிந்தனையை மக்கள் மத்தியில் கொண்டுசெல்லவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வறுமை தொடர்ந்தும் குறிப்பிடத்தக்க சவாலாக காணப்படுகின்றது என தெரிவித்துள்ள கோத்தபாயராஜபக்ச இது குறித்து கூட்டாக கவனம் செலுத்தவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் புதிய அரசமைப்பு குறித்து விவாதங்கள் இடம்பெறுகின்றன  பல கருத்துக்கள் பரிமாறப்படுகின்றன எனவும் குறிப்பிட்டுள்ள கோத்தபாய ராஜபக்ச புதிய அரசமைப்பு நாட்டை பிளவுபடுத்தும் என்ற அடிப்படையில் கருத்துக்கள் பரிமாறப்படுகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.

புதிய அரசமைப்பு உருவாக்கப்படுவதற்கு முன்னர் நாங்கள் மக்கள் இலங்கை என்ற அடையாளத்தை உணரச்செய்யவேண்டும்,அவ்வாறான புரிந்துணர்வை உருவாக்கினால் அவர்கள் பிளவுபடாமல் இலங்கையர்களாக வாழ்வதன் அவசியத்தை உணர்வார்கள் எனவும் தெரிவித்துள்ளார்

சில அரசியல்வாதிகள் தேசியவாதத்தையும் இனவாதத்தையும் ஒன்றாக காண்பித்து குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர்  இலங்கையர்கள் நாட்டை அபிவிருத்தி செய்வதற்ககா தேசியவாதத்தை தழுவவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்

தனிப்பட்ட உரிமைகளிற்கு முக்கியத்துவத்தை அளிப்பதை விட சமூக உரிமைகளில்முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கு முயலவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33