பாதுகாப்பு தரப்பு முன்வைத்த கோரிக்கைகளை மீறி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று யாழ். விஜயத்தை மேற்கொண்டு அங்கு புதிதாக அமைக்கப்பட்ட ஹோட்டல் ஒன்றை திறந்து வைத்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சாவகச்சேரியில் தற்கொலை அங்கி உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்டிருந்தன. இந்த தற்கொலை அங்கி உள்ளிட்ட வெடிபொருட்கள் ஜனாதிபதியை இலக்கு வைத்திருக்கலாம் என்ற கோணத்தில் ஜனாதிபதி வடக்கு விஜயத்தை தவிர்க்க வேண்டும் என பாதுகாப்பு தரப்பினர் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.