சவேந்திர சில்வா நியமனம் - மன்னிப்பு சபையின் கருத்து என்ன?

Published By: Rajeeban

12 Jan, 2019 | 04:06 PM
image

இலங்கையின் புதிய இராணுவ பிரதானி சவேந்திரசில்வாவிற்கு எதிராக முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுகள் யுத்த குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து தீவிர சுயாதீன  விசாரணைகளை மேற்கொள்ளவேண்டியதன் அவசியத்தை புலப்படுத்தியுள்ளது என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

எதிர்காலத்தில் மீறல்கள் இடம்பெறாததை தடுப்பதற்கான  யுத்தத்திற்கு பிந்திய பாதுகாப்பு துறை சீர்திருத்தங்களின் போது படையினர் குறித்து விசாரணைகளை மேற்கொள்வது மிகமுக்கியம் என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

2009 உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணங்களின் போது 58வது படைப்பிரிவின்  தளபதி என்ற அடிப்படையில்  சவேந்திர சில்வா சர்வதேச மனிதாபிமான சட்ட மனித உரிமை சட்டமீறல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள படையணியின் நடவடிக்கைகளிற்கு பொறுப்பாக காணப்பட்டார் என சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது

 மனித உரிமை மீறல்கள் மனிதாபிமான சட்ட மீறல்கள் குறித்த தனது வாக்குறுதிகளை இலங்கை மிகமெதுவாகவே நிறைவேற்றி வரும் தருணத்திலேயே இந்த நியமனம் இடம்பெற்றுள்ளது என மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

உண்மை மற்றும் பாதிக்கப்பட்ட மக்களிற்கான இழப்பீடு குறித்த விடயங்களில் அரசாங்கம் சிறிதளவு முன்னேற்றத்தை எட்டியிருந்தாலும் யுத்த குற்றங்களை விசாரணை செய்வது,போதுமான ஆதாரங்கள் காணப்பட்டால் சந்தேகநபர்களை விசாரணைக்கு உட்படுத்துவது ஆகிய விடயங்கள் குறித்து அரசாங்கம் வலுவான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

நீதி மற்றும் பாதுகாப்புசீர்திருத்தம் தொடர்பான தனது வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றவேண்டும் எனவும் சர்வதேச மன்னிப்புச்சபை கேட்டுக்கொண்டுள்ளது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 14:44:07
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32