தபாலின் மூலம் பூனையை அனுப்பிய நபருக்கு நேர்ந்த சோகம்

Published By: R. Kalaichelvan

12 Jan, 2019 | 01:02 PM
image

அட்டைப்பெட்டி ஒன்றில் வைத்து பூனையை பான்சியாவ் மாவட்டத்திலுள்ள உள்ளூர் விலங்கு மையத்திற்கு அனுப்பிய நபருக்கு பாரிய அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

33 வயதுடைய அவருக்கு, தைவான் விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தை மீறியதாக 60 ஆயிரம் நியூ தைவான் டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த பூனைக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்படவில்லை என்று கண்டறியப்பட்டதால், விலங்குகளின் நோய் தொற்றுகளுக்கான தடுப்பு மற்றும் கட்டுப்பாடுகளை மீறியதாக மேலும் அவருக்கு எதிராக 30 ஆயிரம் நியூ தைவான் டொலர்  அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தபால் விநியோக சேவை மற்றும் காவல்துறை கண்காணிப்பு காணொளியை வைத்து இந்த பூனையை அனுப்பியவரை நியூ தைவான் நகர விலங்கு பாதுகாப்பு மற்றும் சுகாதார ஆய்வு அலுவலகம் அடையாளம் கண்டது.

பூனையை அனுப்பிய யாங் என்பவரை தொடர்பு கொண்டு கேட்டப்போது,

தன்னால் இந்த பூனையை கவனிக்க முடியவில்லை என்றும், முன்பு காலில் ஏற்பட்ட காயத்தால் இந்த பூனையால் சரியாக நடக்க முடியவில்லை என்றும் அக்குபஞ்சர் மற்றும் பாரம்பரிய மூலிகை சிகிச்சை போன்றவற்றை அளித்த பின்பும் பூனை குணமடயவில்லையென தெரவித்துள்ளார்.

இது பற்றி கருத்து தெரிவித்துள்ள விலங்குகள் நிறுவனத்தின் இயக்குநர் சென் யுயான்-ச்சுன், "போதிய காற்றோட்ட வசதி இல்லாத மற்றும் சுத்தமான நீர் செலுத்த வசதியில்லாது ஒரு விலங்கு மூச்சுத்திணறி இறந்துவிடலாம். 

தங்களின் செல்லப்பிராணிகளை பராமரிக்க முடியவில்லை என்றால், அதற்கே உரித்தான முறையான வழிகளை மக்கள் கடைபிடிக்க வேண்டும்," என அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right