அண்மையில் சாவகச்சேரியில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட தகவல் ஒரு நல்ல செய்தியல்ல என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இப்படியான ஆபத்தான விடயங்களை கையாள்வதற்கு திறமையான அனுபவம் கொண்ட சிரேஷ்ட புலனாய்வாளர்களது சேவை அவசியமாகும். சிரேஷ்ட புலனாய்வு அதிகாரிகளில் அறைவாசிக்கும் அதிகமானோர் தற்போது தடுப்புக்காவலில் இருப்பதாகவும் புலனாய்வுத்துறையினர் தமது கடமைகளை சரியாக மேற்கொள்ளவதில் சில சங்கடங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும், தெரிவித்தார்.

கண்டி ராஜோபவனாராம விகாரையில் நேற்று இடம்பெற்ற கூட்டம் ஒன்றிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

(வத்துகாமம் நிருபர்)